கொழும்பில் சொகுசு அடுக்குமாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் ; தாயார் பாடசாலை மீது சட்ட நடவடிக்கை

Published By: Digital Desk 3

02 Jan, 2025 | 11:41 AM
image

கொழும்பு கொம்பனித்தெருவில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் மற்றும் மாணவனின் மரணம் கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் தாயார் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றார்.

பாடசாலையின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற செயற்பாடே மாணவனின் மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவன் உயிரிழந்த அன்று  நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கோரி பாடசாலை மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்குப் பல கடிதங்கள் எழுதியிருந்தார். ஆனால் சுமத்தப்பட்ட அனைத்து உரிமைகோரல்களையும் குற்றச்சாட்டுகளையும் மறுத்து பாடசாலை நிர்வாகம் பதிலளித்துள்ளது. 

இதனை அடுத்து,  குறித்த தாய் சட்ட நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.

அவர் பாடசாலைக்கு அனுப்பிய கடிதத்தில் 500,000,000 ரூபாய் நட்ட ஈடு கோரியுள்ளார். பாடசாலையின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற செயற்பாடே மாணவனின் மரணத்திற்குக் காரணம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த மாணவனும், மற்றொரு மாணவியும் தங்கள் பாடசாலையில் இருந்து மதியம் 2.20 மணியளவில் வெளியேறியதாகப் பாடசாலையிலுள்ள சிசிரிவி காட்சிகள் சுட்டிக்காட்டினாலும், மாலை 4.32 மணியளவிலேயே வெளியேறியதாகப் பாடசாலை தனக்குக் கூறியதாகத் தாயார் கூறுகிறார்.

அத்தோடு, பாடசாலை மதியம் 3.00 மணி முதல் மாணவியின் பெற்றோருடன் தொடர்பு கொண்டிருந்தது. எனவே முன்பே அவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தால், என் மகனைக் காப்பாற்றியிருக்க முடியும். அவரது உயிரைக் காப்பாற்ற எனக்கு ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே கிடைத்தது, 

ஏனெனில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் எனது மகன் மாலை 4.45 மணியளவில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என நான் நம்புகிறேன். மதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை பாடசாலை மற்றும் மாணவியின் பெற்றோர்கள் எனது மகனுடன் தொடர்பு கொண்டிருந்தனர், அவர்கள் சில ஆபத்தை உணர்ந்ததால், அந்த நேரத்தில் அவர்கள் பொலிஸாரையும் தொடர்பு கொண்டுள்ளனர் என அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசுக்கட்சி வழக்கு தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு...

2025-02-15 01:16:52
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56