கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 529 பேர் உள்ளடங்களாக 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published By: Vishnu

02 Jan, 2025 | 02:38 AM
image

(செ.சுபதர்ஷனி)

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போக்குவரத்து நடவடிக்கைக்கு அமைய 01ஆம் திகதி புதன்கிழமை காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 529 பேர் உள்ளடங்களாக 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய கடந்த 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 529 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 57 சாரதிகள், அதிக வேகத்தில் வாகம் செலுத்திய 54 சாரதிகள், விதி மீறல்களில் ஈடபட்ட 1,057 சாரதிகள், அனுமதிபத்திர உரிமை மீறல் தொடர்பில் 614 சாரதிகள் மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுடன் தொடர்புடைய 4,953 சாரதிகள் உள்ளடங்களாக 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேற்படி விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்ட தினத்திலிருந்து நேற்று முன்தினமே மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அக எண்ணிக்கையிலான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வானக விபத்துகளால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது ஆகையால் பொதுமக்கள் இதை கருத்தில் கொண்டு  செயற்பட வேண்டும். போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரத்துக்கு இடைப்பட்ட தொகையில் தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன் அவர்களின்  சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும். மேலும் பொது போக்குவரத்து வாகன சாரதிகள் மேற்படி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்பதையும் கவனத்தில் கொள்வதும் அவசியம்.

எதிர்வரும் நாட்களிலும் மது போதையில் வாகனத்தை செலுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து வாகன சாரதிகளிடமும் கோரிக்கை விடுக்கிறேன். மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மேற்படி விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55