அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது வாகனத்தை மோதியவர் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுபவர் போல காணப்பட்டார் என நியுஓர்லியன்சின் தலைமை பொலிஸ் அதிகாரி ஆன்கேர்க்பட்ரிக் தெரிவித்துள்ளார்
அவர் தெரிவித்துள்ளதாவது
அந்த நபர் மிகவேகமாக டிரக் வண்டியை செலுத்தினார்.
அவர் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுபவர் போல காணப்பட்டார்,தனது வாகனத்தை பயன்படுத்தி தன்னால் முடிந்தளவிற்கு பலரை தாக்குவதற்கு அவர் முயன்றார்.
பத்து பேர் உயிரிழந்துள்ளனர் 35 பேர் காயமடைந்துள்ளனர், இந்த எண்ணிக்கை மாறலாம்.
மருத்துவமனையில் உள்ள நபர் குறித்து எங்களிடம் குறைந்தளவு தகவல்களே உள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் எத்தனை பேர் அமெரிக்கர்கள் என்பது தெரியவில்லை.
வாகனத்தை செலுத்தியவர் அதிலிருந்து பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார்.
இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM