இன்றைய சூழலில் எம்முடைய வீடுகள் நவீனமயமாகிவிட்டது. குறிப்பாக ஒவ்வொரு அறைகளுக்கான கதவுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. பெரும்பான்மையான பிள்ளைகள் அதாவது ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் வீட்டில் விளையாடும் போது கதவோரங்களில் கை விரல்கள் சிக்கிக் கொள்வதுண்டு.
இதனால் குழந்தைகள் வலியால் துடிக்க, பெற்றோர்களும் துடித்து போய் விடுவார்கள். சில தருணங்களில் பிள்ளைகளின் விரல்கள் துண்டாக உடைந்து விடுவதும் உண்டு. இதனை மருத்துவ மொழியில் ஃபிங்கர்டிப் இஞ்சூரிஸ் என குறிப்பிடுகிறார்கள்.
இந்த தருணத்தில் பெற்றோர்கள் பதற்றமடைந்து பிள்ளைகளை அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு விரைந்து அழைத்துச் செல்கிறார்கள். இதுபோன்ற விரல் நுனி பாதிப்பிற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் பதினைந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள் பல்வேறு காரணங்களால் அவர்களுடைய கைவிரல் நுனிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுக்கு முதலுதவி செய்து ரத்தப் போக்கினை கட்டுப்படுத்துகிறார்கள்.
அதன் பிறகு பாதிப்பு எங்கு ஏற்பட்டிருக்கிறது? என்பதனை துல்லியமாக அவதானிக்கிறார்கள் அதாவது தோல்- திசு - விரல் எலும்பு - நகம் - நகத்தின் அடிப்பகுதி- என எங்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
அதன் பிறகு கை விரலின் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடலின் வேறு பகுதியில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை பகுதி அளவு வெட்டி எடுத்து அதனை விரல் பகுதியில் வைத்து பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குகிறார்கள்.
இந்த தருணத்தில் பாதிப்பின் வீரியம் மற்றும் தன்மையை அவதானித்து வைத்தியர்கள் ஸ்கின் கிராப்டிங் மற்றும் ரீகான்ஸ்ட்ராக்டிவ் ஃபிளாப் சர்ஜேரி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குகிறார்கள். வெகு சிலருக்கு பாதிப்பின் தன்மை வீரியமாகவும், தீவிரமானதாகவும் இருந்தால் அவர்களுக்கு மட்டும் விரல்களின் நுனி பகுதியை துண்டிக்கும் ரீபிளாண்டேசன் எனும் நவீன சத்திர சிகிச்சையை மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்களின் உதவியுடன் மேற்கொண்டு நிவாரணம் வழங்குகிறார்கள்.
பாதிக்கப்பட்ட விரல் நுனிக்கு முறையான சிகிச்சையை வைத்தியர்களிடம் பெறாவிட்டால் நாளடைவில் தொற்று பாதிப்பு , காயம் விரைவில் ஆறாத தன்மை , விரல்களில் உணர்வின்மை , விரல்களின் விறைப்பு தன்மை , விரல் நகங்களின் அசாதாரணமான வளர்ச்சி, நரம்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு நாட்பட்ட வலி போன்ற தாங்க இயலாத அசௌகரியம் உண்டாகும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதனால் கை விரல் நுனி பகுதியில் காயம் ஏற்பட்டால் அதனை உடனடியாகவும் ,விரைவாகவும், முழுமையாகவும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வைத்தியர் சிவக்குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM