புகழ்பெற்ற வர்த்தக பிரமுகரான கஸ்தூரி செல்லராஜா வில்சன், OrphanCare இன் காப்பாளர் சபை அங்கத்தவர்களில் ஒருவராக அண்மையில் இணைந்தார். அநாதரவான சிறுவர்கள் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களிலிருந்து வயது வந்த பருவத்தை எய்தும் நிலையில், தமது வாழ்வில் இரண்டாவது கைவிடப்படலை தவிர்த்துக் கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமாக OrphanCare அமைந்துள்ளது.
சிறுவர்களுக்கான உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 2ஆம் ஆக்கத்தை பின்பற்றி செயலாற்றும் OrphanCare இனால் சகல சிறுவர்களும் தமது இனம், மதம், நிறம் அல்லது தேசியம் ஆகிய பாகுபாடின்றி இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முன்னணி சக்தியூட்டும் பான வகையான 5-hour International Corporation இன் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக கஸ்தூரி தற்போது செயலாற்றுகின்றார்.
இலங்கையின் பொதுப் பட்டியலிடப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமொன்றில் நியமிக்கப்பட்ட முதலாவது பெண் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் கீர்த்தி நாமத்தை கஸ்தூரி பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டிருந்ததுடன், 2024 மார்ச் மாதம் வரை இந்த நிலையில் அவர் தொடர்ந்திருந்தார்.
இவர் தற்போது இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிப்பதுடன், முன்னர் இலங்கை பணிப்பாளர் கல்வியம், CIMA ஸ்ரீ லங்கா மற்றும் இலங்கை அமெரிக்க வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளிலும் அங்கம் வகித்திருந்தார்.
கஸ்தூரி விளையாட்டுத் துறையில் தேசிய மட்டத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், வலைபந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்டம் ஆகியவற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதுடன், 1989 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தலைமைத்துவமளித்திருந்தார். பின்னர் இலங்கை தேசிய விளையாட்டு பேரவையின் அங்கத்தவராக அவர் செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித நேய அடிப்படையில், யுனிசெப் வணிக பேரவையில் கஸ்தூரி அங்கம் வகிப்பதுடன், இதில் சிறுவர் உரிமைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றில் முக்கிய அங்கம் பெற்றுள்ளார். தற்போது OrphanCare இன் காப்பாளராகவும் இணைந்துள்ளார். ஹேமாஸ் நிறுவனத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், பியவர முன்பள்ளிகள், Ayati மற்றும் எகசே சலகமு
...
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM