மீட்சி தொடங்கிவிட்டது 

Published By: Digital Desk 3

01 Jan, 2025 | 04:55 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

கிறிஸ்மஸ் பிறந்த நள்ளிரவில் கொழும்பிலும் குறிப்பாக வசதிபடைத்த உயர்வர்த்தக பகுதிகளிலும் தொடங்கிய ஜொலிப்பு புத்தாண்டு பிறப்பையும் கடந்து தொடருகிறது. தலைநகரின் இந்த இரவு வெளிச்சத்தில்  மூன்று வருடங்களுக்கு முன்னர் அது படுமோசமான பொருளாதார வீழ்ச்சியை  கண்டது என்பதற்கான எந்த அறிகுறியையும் காணமுடியவில்லை.

அரசாங்கத்தை பதவி கவிழ்த்து ஜனாதிபதியை  நாட்டைவிட்டு தப்பியோட வைத்த 'அறகலய ' போராட்டத்தின் குவிமையமாக அன்று விளங்கிய கொழும்பு கோட்டை காலிமுகத்திடல் புத்தாண்டு கொண்டாட்டங்களின் மையமாக மாறியது. அந்த மையத்தை நோக்கி ய வீதிகளின்  வாகன நெரிசல் அன்று எரிபொருட்களை பெறுவதற்காக  பெட்ரோல் விற்பனை  நிலையங்களுக்கு வெளியே காணப்பட்ட நீண்ட வரிசைகளை கிரகணம் செய்துவிட்டது.

தலைநகரின் ஆடம்பரமான பகுதிகளில் ஹோட்டல்களும் இரவுவிடுதிகளும் நிரம்பிவழிந்தன. இந்த கொண்டாட்டங்களுக்கான செலவு மிகப்பெரியது.  ஆனால், அங்கெல்லாம் கூடிய பெருமளவானோரினால் குறைந்தபட்சம் எப்போதாவது ஒரு தடவையாவது அவ்வாறு செலவழிக்கக்கூடியதாக இருக்கிறது. நீர்நிலைகளை நோக்கி அமைந்திருக்கும் ஐ.ரி.சி. ரத்னதீப மற்றும் சிறாறி ஒஃவ் ட்றீம்  போன்ற புதிய ஹோட்டல்கள் இரவில் துபாயில் காணக்கூடிய தோற்றத்தை கொழும்பில்  தோற்றுவிக்கின்றன.

தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் பங்குச்சந்தை நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டிருப்பதற்கான சான்றாகும். அரசியல் உறுதிப்பாட்டை உணரக்கூடியதாக இருக்கிறது. அந்த உறுதிப்பாடு பாராளுமன்றத்தில் அரசாங்கம் அனுபவிக்கின்ற மூன்றில் இரண்டு பெரும்பானமை பலத்தில் இருந்து மாத்திரமல்ல, அரசாங்கத்தினால் பின்பற்றப்படுகின்ற கொள்கைகளில் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு வேறுபட்ட யோசனைகளை முன்வைப்பதில்  அல்லது முன்மொழிவுகளை செய்வதில் எதிர்க்கட்சிக்கு இருக்கும் இயலாமையில் இருந்தும் வருகிறது.

கொண்டாட்டங்களில்  மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பல்வேறுபட்ட மட்டங்களில் அவர்கள் பெரும் எண்ணிக்கையில்  பங்கேற்பதில் இருந்து காணக்கூடியதாக இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விலையுயர்ந்த உணவு வகைகளையும் நடமாடும் உணவகங்கள் இயங்கும் காலிமுகத்திடல் திறந்த வெளியில் உணவுகளையும் மக்கள்  சுவைத்து மகிழ்கிறார்கள். பிரமாண்டமான கடைத்தொகுதிகளில்  பீசா ஹட்டில் உணவருந்துகிறார்கள்.  பொருட்களை உடனடியாக கொள்வனவு செய்யாவிட்டாலும் அவற்றை பார்வையிடுவதற்காக குடும்பம் குடும்பமாக கடைத் தொகுதிகளுக்கு மக்கள் வந்து போகிறார்கள். 

இந்த செலவினங்களை மக்களின் வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகவும் உயர்ந்தவையாக இருக்கிறது. வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு அரசாங்கம் பெரும் போராட்டதை நடத்துகின்ற போதிலும் வெற்றியைக் காணமுடியாமல் இருக்கிறது. " அரிசி மாஃபியா" வுடனான  அரசாங்கத்தின் தற்போதைய சண்டையில் அரசி இறக்குமதிக்கு பிறகு சாதகமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்று வருடங்களுக்கு முன்னர் மூன்று மடங்காக அதிகரித்த பெருவாரியான   பொருடகளின் விலைகள் இன்னமும் இறங்கிவராத நிலையில் அதனுடன் சேர்த்து தேங்காயின் விலையும் உயர்ந்து விட்டது.

அபிவிருத்தியை பரவச்செய்தல்

கொழும்புக்கு வெளியே கிறிஸமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பெருமளவுக்கு மந்தமானவையாகவே காணப்பட்டன. கிறிஸ்தவ தேவாலயங்களே அதில் கவனத்தைச் செலுத்தின. கொழும்புக்கு வெளியே பெரிய கொண்டாட்டங்களை பாரம்பரியமான சிங்கள -- தமிழ்ப் புத்தாண்டின் போதே வழமையாகக் காணலாம். யாழ்ப்பாணம் போன்ற சில மாகாண தலைநகரங்களில்  அவற்றுக்கே உரித்தான பண்டிகை விளக்குகளையும் அலங்காரங்களையும் கொண்டிருந்தன. ஆனால், கொழும்பின் அளவுடன்  அவற்றை எந்த விதத்திலும் ஒப்படமுடியாது. தேசியத் தலைநகரான கொழும்பின் கொள்வனவுச் சக்திக்கும் மாகாண தலைநகரங்களின் கொள்வனவுச் சக்திக்கும் இடையிலான வேறுபாடு இந்த ஏற்றத்தாழ்வை பிரதிபலித்தது.

தலைநகர பிராந்தியத்தில் மாத்திரமல்ல, நாடுபூராவும் ஒப்புரவான அபிவிருத்தி அவசியம் என்பது அதிகாரப் பரவலாக்கத்துக்காக முன்வைக்கப்படும் முக்கியமான நியாப்பாடுகளில் ஒன்று. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கும் தாங்கள் வாழ்கின்ற  பகுதிகளுக்கும் பயன்தரக்கூடியதாக தீர்மானங்களை எடுப்பதில் நாட்டம் காட்டினால் அதிகாரமும் செல்வமும் ஒன்றாக சேர்ந்தே செல்லும். 

அபிவிருத்தியின் பயன்கள் கூடுதலான அளவுக்கு பரந்தளவில் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக மாகாணத் தலைநகரங்களுக்கு அபிவிருத்தியின் இயந்திரங்களை வழங்குவதே மாகாணங்களுக்கான அதிகாரப்  பரவலாக்கத்தின் நோக்கமாகும். அதிகாரப் பரவலாக்கத்தின் இந்த அம்சத்தை பொதுமக்களுக்கு விளக்கிக்கூற வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப் பரவலாக்கம் என்பதை இனநெருக்கடியை தீர்ப்பதற்காக வெளிநாடுகளினால் திணிக்கப்படுகின்ற ஒரு கோட்பாடாக பார்க்கிற்ர்கள்.மத்தியமய ஆட்சி நடைமுறைச் சாத்தியமற்றதாக இருந்ததன் விளைவாக இலங்கையில்  மன்னர்கள் காலத்தில் இருந்தே பரவலாக்கம் செய்யப்பட்ட ஆட்சிமுறைமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் இனநெருக்கடிக்கு தீர்வுகாண்பதன் பின்னணியிலேயே நோக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அதை தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கிய ' அறகலய ' போராட்டத்தின் பிரதான சுலோகமாக அமைந்திருந்த ' முறைமை மாற்றத்துக்கு '  பொருத்தமாக அமையக்கூடிய பரந்த நோக்கு ஒன்றின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியும்.

1987 ஆம் ஆண்டில் இனப்போரின் உச்சக்கட்டத்தில் இந்தியாவின் தலையீட்டையடுத்து இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தத்தின் ஊடாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதே தற்போதைய அதிகாரப்பரவலாக்கல் முறைமையாகும். அதனால் 13 வது திருத்தத்தின் கீழான அதிகாரப்பரவலாக்கம் நாட்டின் இறைமை மற்றும்  ஆட்புல ஒருமைப்பாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற அடிப்படையில் நோக்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. 

அந்த அதிகாரப் பரவலாக்கத்தின் நடைமுறைப்படுத்தலை அதை சட்டத்திற்குள் கொண்டுவந்த அரசாங்கம் உட்பட சகல அரசாங்கங்களுமே எதிர்த்து வந்திருக்கின்றன.  தற்போதைய அரசாங்கம் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையின் வேறுபட்ட அடிப்படையில் புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக அதிகாரத்தை பரவலாக்குவற்கு தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் உறுதிப்பாட்டுக்கு  அதுவே காரணமாக இருக்கலாம்.

மாற்றமடைந்த நடத்தைகள்

சர்வதேச நிதி நிறுவனங்களின் எதிர்வு கூறல்களையும் விட உயர்வானதாக இந்த வருடம் 4 சதவீதத்தினால் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படும் பொருளாதாரத்தின் முன்னேற்றம் அரசியல் சமுதாயத்தில் காணப்படும் உறுதிப்பாட்டின் விளைவானதாக அமையும். அந்த உறுதிப்பாடு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பில் பிரதிபலிக்கிறது. இந்த நேர்மறையான வளர்ச்சிக் காரணிக்கு ஊழலற்ற ஆட்சிமுறை மீதான அரசாங்கத்தின் உறுதிமொழி உதவியாக அமையும்.

கடந்த காலங்களைப் போலன்றி, புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாட்களில் அரசாங்கத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பெரிய ஊழலும் இடம்பெறவில்லை. அண்மைய  கடந்தகால நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது  பாராளுமன்ற  புதியதொரு சபாநாயகரை பதவி விலகவைத்த கலாநிதிப்பட்ட பிரச்சினை புதிய ஒரு நடைமுறையாக இருக்கிறது. நாட்டின் நற்பெயருக்கும் பொருளாதாரத்துக்கும் பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தாங்களாக பதவி விலகவில்லை என்பது மாத்திரமல்ல பதவி விலகுமாறு கேட்கப்பட்டதுமில்லை.

ஜனாதிபதியிடமும் அவரின் உயர்மட்ட குழுவினரிடமும்  காணக்கூடியதாக இருக்கின்ற பகட்டு ஆரவாரமில்லாத -- ஆடம்பரமில்லாத -- ஊழலலற்ற மனப்பான்மையும்  நடத்தைகளும் அடிமட்டம் வரை சுவறிச் செல்கின்றது போன்று தோன்றுகிறது. வதிவிடம் தொடர்பாக கிராம உத்தியோகத்தரின் சாட்சிப்பத்திரம் ஒன்றைப் பெறுவதற்காக விடுமுறை நாட்களில் உள்ளூராட்சி அலுவலகம் ஒன்றுக்கு சென்றபோது இதை உணரக்கூடியதாக இருந்தது. கடமையில் இருந்த அதிகாரி எந்தவிதமான தாமதமோ அல்லது அமளியோ இல்லாமல் விண்ணப்ப நடைமுறைகளைப் பற்றி கூறியதுடன் தேவையான ஆவணத்தை தந்தார். 

சம்பந்தப்பட்டவர் தனது முன்னிலையிலேயே கையழுத்திடுவதை உறுதிப்படுத்துவது உட்பட சகல விதமான நடைமுறைகளையும் தான் பின்பற்றுவதாக அவர் விளக்கமளித்தார்.தனது மேலதிகாரி ஆவணத்தை பரிசோதிக்க வேண்டும் என்பதையும் அவர் கூறினார். அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் காணப்படும் நடத்தை மாற்றம் கடமைகளைச் செய்வதில் அடிமட்டம் வரை பின்பற்றப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தனது பகுதியில் பல இனத்தவர்களும் பல மதத்தவர்களும் வாழ்கின்றனர் என்பதையும் அவர் கூறினார்.  எனக்கு முன்னதாக, கடந்த இருபது வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவரும்  புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர் தேசிய அடையாள அட்டை ஒன்றைப் பெறுவதற்கு வந்ததாகவும் அவரிடம் தேவையான சகல ஆவணங்களும் இருந்ததால் அவரை முன்னர் அறிந்திருக்காத போதிலும் தேவையான பத்திரத்தை கொடுத்ததாகவும் அவர் ஒரு குடிமகன் என்பதால் சமத்துவமாக நடத்துவது முக்கியம்னது என்றும் கூறினார்.

இதுவும் புதிய அரசாங்கத்திடம் காணக்கூடியதாக இருக்கும் நடத்தை மாற்றத்தின் நேர்மறையான செல்வாக்கின் இரு பகுதியா என்று கேட்டபோது இல்லை இது தான் நல்லாட்சி  அரசாங்க காலத்தில் பெற்றுக்கொண்ட செய்தி என்று அவரிடமிருந்து பதில் வந்தது. புதிய அரசாங்கம் கடந்த காலத்தின் நல்லதை மாத்திரமல்ல,  கெட்டதையும் கையேற்க வேண்டியிருந்த போதிலும், எதிர்காலத்தைகக் கட்டிழெுப்ப அவற்றில் இருந்து நல்லதை மாத்திரமே எடுத்துக் கொள்கிறது. இது எதிர்காலத்துக்கான நம்பிக்கையைத்  தருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...

2025-01-21 17:45:45
news-image

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு 

2025-01-19 18:22:12
news-image

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...

2025-01-19 13:04:09
news-image

ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?

2025-01-20 13:21:04
news-image

 ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு  முயற்சி...

2025-01-17 17:35:47
news-image

வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...

2025-01-17 11:34:31
news-image

அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?

2025-01-12 17:29:01
news-image

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...

2025-01-12 17:03:14
news-image

புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...

2025-01-05 16:05:14
news-image

ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்

2025-01-05 11:53:17
news-image

மீட்சி தொடங்கிவிட்டது 

2025-01-01 16:55:44
news-image

2025 ரணிலின் வியூகம் என்ன?

2024-12-29 18:28:22