(எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது 2024ஆம் ஆண்டாகும். அதன் எண்ணிக்கை 3இலட்சத்தி 12ஆயிரத்தி 836 ஆகும்.
இதற்கு முன்னர் அதிகமானவர்கள் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது 2022 ஆம் ஆண்டு என்பதுடன் கடந்த 6 வருடங்களில் 13 லட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்.
அதன் பிரகாரம் 2024ஆம் ஆண்டில் 185162 ஆண் தொழிலாளர்களும் 127674 பெண் தொழிலாளர்களும் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இதில் அதிகமானவர்கள் குவைட் நாட்டுக்கே சென்றுள்ளனர்.
அதன் எண்ணிக்கை 77546 பேராகும். அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கே அதிகமானவர்கள் தொழிலுக்காக சென்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 51550 பேராகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் காணப்படும் முக்கிய விடயம்தான், கடந்த வருடங்களுக்கு நிகராக தென்கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக இலங்கையர்கள் செல்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதாகும்.
அதன் பிரகாரம் 2024ஆம் ஆண்டில் தென்கொரியாவில் தொலுக்காக 7098பேரும் இஸ்ரேலில் தொழிலுக்காக 9665பேரும் மற்றும் ஜப்பானில் தொழிலுக்காக 8665 பேரும் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு செலாவணி அளவு இந்த காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவில் அதிகருத்துள்ளது.
அதன் பிரகாரம் 2024 நவம்பர் மாதம் முடிவடையும்போது 6462 மில்லியன் டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளது. அதேவேளை, 2023ஆம் ஆண்டு 297584 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றிருக்கின்றனர். அவர்களில் 132,904 பெண் தொழிலாளர்களும் 164680 ஆண் தொழிலாளர்களாகும்.
இதற்கு முன்னர் அதிகமானவர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது 2022ஆம் ஆண்டிலாகும். அதன் அளவு 310947 பேராகும் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM