எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கைச் சுற்றுலாத்துறைக்கான 3 பிரதான விருதுகளை வென்றுள்ளது !

01 Jan, 2025 | 03:11 PM
image

இலங்கைச் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையினால் சமீபத்தில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான இலங்கைச் சுற்றுலாத்துறை விருதுகள் நிகழ்வில் மிகச் சிறந்த உள்வரும் பயண முகவர் - பெரிய பிரிவு, மிகச் சிறந்த பயணக் கப்பல் சேவை செயற்படுத்துநர்  மிகச் சிறந்த தொழில்சார் ஆஐஊநு ஏற்பாட்டாளர் ஆகிய பிரதான விருதுகளை வென்றதன் மூலம் எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. 

இந்த விருதுகள், சுற்றுலாத்துறையின் தொடர்ச்சியான அபிவிருத்திக்கு எயிற்கின் ஸ்பென்ஸ் நிறுவனம் வழங்கும் தலைமைத்துவத்தையும் அதன் அர்பணிப்பையும் வலியுறுத்துகின்றன.

 சுற்றுலாத் தளங்களைச் சந்தைப்படுத்துதல், புத்தாக்கமான செயற்பாடுகள், மிகச் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றில் நிறுவனம் காட்டும் ஆழ்ந்த அக்கறையையும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் இத் துறையின் வளர்ச்சிக்கும் நிறுவனம் வழங்கும் முக்கியமான பங்களிப்பையும் அவை தெளிவாக பிரதிபலிக்கின்றன.  

பெரிய பிரிவில் மிகச் சிறந்த பயண முகவர் என்ற பிரதான விருதை வென்றதன் மூலம், எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் இத் துறையில் தரச்சிறப்பிற்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது. 

மேலும், பயணக் கப்பல் சேவை செயற்படுத்துநர்  என்ற முறையில் முன்னணி வகிக்கும் நிறுவனம், சந்தையில் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட பங்கினை வகிப்பதோடு, இலங்கையை ஒரு முதன்மையான பல்துறைமுக சேருமிடம் என்ற முறையில் பிரபல்யப்படுத்துவதற்கான தராதரங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

மிகச் சிறந்த ஆஐஊநு ஏற்பாட்டாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம் எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் தனது வலிமையை மென்மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.   

விருதுக்குரிய நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்கு முக்கிய செயற்பாட்டுத் துறைகளின் விரிவான அம்சங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. 

கணக்காய்வு செய்யப்பட்ட நிதிச் செயற்பாடுகள், நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சிகள், சுற்றாடல் நலத்தைப் பேணும் செயன்முறைகள், வியாபார மற்றும் சந்தைப்படுத்தல் மூலோபாயங்கள், வாடிக்கையாளர் சேவை, மனிதவள முகாமைத்துவம் மற்றும் பேண்தகு தன்மையான நடைமுறைகள் என்பன அவற்றுள் அடங்கும். 

தொழிற்றுறை நிபுணர்கள் மற்றும் மதிப்பார்ந்த நிறுவனத் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு நடுவர்கள் குழுவினால் விருதுக்குரிய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன. 

பங்குபற்றிய ஒவ்வொரு நிறுவனமும் விரிவான மற்றும் யாவும் உள்ளடங்கிள ஓர் எழுத்துமூல விண்ணப்பம், கணக்காய்வு செய்யப்பட்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட கணக்கு அறிக்கைகள் என்பவற்றைச் சமர்ப்பிக்கும்படியும் நடுவர்கள் குழுவின் முன்னிலையில் நேரடியான சமர்ப்பணத்தை  முன்வைக்கும்படியும் கேட்கப்பட்டிருந்தன. 

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸின் சாதனை பற்றி அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் ஜயசுந்தர கருத்து வெளியிடுகையில்,

 2023 , 2024ஆம் நிதியாண்டில் 234,976 மகிழ்ச்சிகரமான சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை வழங்க எமது இணையற்ற பங்களிப்பு உதவியுள்ளது.

 இக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கென ஆகக் கூடுதலான ஹொட்டேல் அறைகளை நாமே பதிவு செய்தோம். 

போக்குவரத்துத் துறையினர், தங்குமிட வசதி வழங்குநர்கள் மற்றும் ஏனைய வழங்குநர்களுடன் நெருங்கிய முறையில் செயற்பட்ட நாம் நாட்டின் சுற்றுலாத் தொழிற்றுறைக்கு உந்துசக்தியையும் உத்வேகத்தையும் வழங்கினோம்.

 மேலும், சுற்றுலாத்துறை மேம்பாட்டு வரிக்கு (வுனுடு) மிகக் கூடுதலான பங்களிப்பை செய்த நாம், சுற்றுலாத்துறை மூலமான வெளிநாட்டு நாணயச் சம்பாத்தியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினோம்” என்று கூறினார்.      

எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி.யின் சுற்றுலாத்துறைப் பிரதானி ஸ்ட~hனி ஜயவர்தன தகவல் தருகையில்,

“எமது கூட்டு முயற்சிப் பங்காளியான வுருஐ நிறுவனமும்  (உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலாத்துறைக் கம்பனி) வுருஐ ட்ரவல் பி.எல்.சி.யின் தலைவரான செபஸ்தியன் எபெல் அவர்களும் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவிற்காக நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். 

அவ்வாறே, பேண்தகு வளர்ச்சிக்கான எமது கண்ணோட்டத்திற்குப் பெறுமதிமிக்க வழிகாட்டுதலையும் நம்பிக்கையையும் வழங்கிய எமது நிறுவனத்தின் தலைவர் டீ.எச்.எஸ். ஜயவர்தன மற்றும் சபை பணிப்பாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்” என்று தெரிவித்தார்.

நாளாந்தம் தரச்சிறப்பான சேவையை வழங்குவதில் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத தொழில் நிபுணத்துவத்தைக் வெளிப்படுத்திய எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும்  ஸ்ட~hனி ஜயவர்தன, . நளின் ஜயசுந்தர ஆகிய இருவரும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். 

எமது வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய நம்பிக்கை வாய்ந்த சுற்றுலா ஒழுங்குபடுத்துநர்கள், ஹொட்டேல் பங்குதாரர்கள் மற்றும் எண்ணற்ற வழங்குநர்கள் உள்ளிட்ட எமது மதிப்புக்குரிய பங்குதாரர்கள் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்கும் அவர்கள் தமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்தனர்.

உலகளாவிய தொற்றுநோய் பரவல் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுற்றுலாத் தொழிற்றுறைக்குப் புத்துயிரூட்டுவதில் எயிற்கின் ஸ்பென்ஸ் ஆற்றிய அதிமுக்கியமான பங்கினைப் பாராட்டுவது அவசியமாகும். 

பாரம்பரியமான சந்தைகளின் செயற்றிறன் வீழ்ச்சியடைந்து அங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்த நிலைமையில் புதிய சந்தைகளை உருவாக்குவதில் எயிற்கின் ஸ்பென்ஸ் முன்னணி வகித்தது.

இந்த வருடாந்த விருதுகள் நிகழ்வும் அங்கீகாரமும் சுற்றுலாத்துறை பங்காளிகளின் முயற்சிகளைப் பாராட்டுவதற்கான ஒரு வழிமுறையாக அமைந்தது. 

சுற்றுலாத்துறை விருதுகள் நிகழ்வினை ஏற்பாடு செய்தமைக்காக ஸ்ரீலங்கா சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபைக்கு எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. இந்த நிகழ்வு இனிமேல் வருடாவருடம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த விருதுகள் நிகழ்வில் போற்றத்தக்க சாதனை புரிந்ததன் மூலம், எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் இலங்கையின் சுற்றுலாத்துறை அரங்கில் தனது முதன்மை நிலையை மேலும் உறுதிசெய்துகொண்டது. 

திட்டமிட்ட முறையில் ஒழுங்கு செய்யப்பட்ட சுற்றுலாத் துறையில் தொடர்ந்தும் முன்னணி வகிக்கும் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையற்ற பயண அனுபவங்களை வழங்கி, உலகின் முன்னணி சுற்றுலா தளம் என்ற ஸ்தானத்திற்கு இலங்கையை உயர்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் ஆடை துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...

2025-01-22 18:11:55
news-image

இலங்கையின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஹெக்ஸாவேர்...

2025-01-23 22:17:56
news-image

சுப்பர் பரிசு வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கல்

2025-01-22 15:31:41
news-image

SDB தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக...

2025-01-22 15:30:55
news-image

' கொமர்ஷல் வங்கி 'ஆண்டின் பசுமை...

2025-01-22 15:10:50
news-image

12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024...

2025-01-22 15:43:00
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க இரண்டு...

2025-01-22 15:10:26
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2025-01-22 15:42:44
news-image

LOLC பைனான்ஸ் வழங்கும் முதல் பிரெய்லி...

2025-01-22 15:09:09
news-image

SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இணைந்து...

2025-01-22 13:46:35
news-image

MMCA இலங்கை ‘முழு நில அமைப்பு’...

2025-01-15 11:09:05
news-image

இலங்கையில் மிகப் பெரிய வெளிநாட்டு விமான...

2025-01-12 09:58:53