எல்லையில் பாக்- தலிபான் மோதல் -முழுமையான யுத்தம் குறித்து அச்சம்

Published By: Rajeeban

01 Jan, 2025 | 02:20 PM
image

https://www.telegraph.co.uk/

பாக்கிஸ்தானிய படையினரை இலக்குவைத்து ஆப்கானின் தலிபான்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக முழுமையான யுத்தம் குறித்து அச்சநிலையேற்பட்டுள்ளது.

பாக்ஆப்கான் எல்லையில் உள்ள பாக்கிஸ்தானின் பலநிலைகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ள தலிபான் பாக்கிஸ்தான் பதில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்த்து எல்லைக்கு தனது ஆயுதமேந்திய உறுப்பினர்களை அனுப்பிவைத்துள்ளது.

ஆப்கானின் தலிபானிற்கு நெருக்கமான தெஹ்கீரீக் ஈ தலிபான் என்ற அமைப்பின் தளங்கள் மீது பாக்கிஸ்தான் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்தே எல்லையில் பதற்ற நிலை மூண்டுள்ளது.

பாக்கிஸ்தானின் இந்த தாக்குதல்களால் பெண்கள் குழந்தைகள் உட்பட 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தலிபான் தெரிவித்துள்ளது.

ஆப்கானை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து தலிபானிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை பாக்கிஸ்தான் இரகசியமாக தலிபானிற்கு ஆதரவளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாக்கிஸ்தான் படைவீரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவரும் தலிபானிற்கு நெருக்கமான டிடிபி அமைப்பிற்கு எதிராக பாக்கிஸ்தான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

தெஹ்கீரீக் ஈ தலிபான் அமைப்பிற்கு எதிரான தனது தாக்குதல்களின் போது தலிபான் தலையிடாது விலகியிருக்கும் என பாக்கிஸ்தான் இராணுவம் கருதியது.

ஆனால் இதற்கு மாறாக அமெரிக்க படையினர்  ஆப்கானிலிருந்து வெளியேறும்போது அவர்கள் கைவிட்டுச்சென்ற ஆயுதங்களை தலிபான் அமைப்பினர்  தெஹ்கிரீக்  ஈ தலிபான் அமைப்பினருக்கு வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து 2021 பின்னர் ( காபுலை தலிபான் கைப்பற்றிய பின்னர்) தெஹ்கிரீக்  ஈ தலிபான் அமைப்பு பாக்கிஸ்தானிற்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

பாக்கிஸ்தானுடனான மோதல்கள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள தயார்  தலிபான் அதிகாரிகள் டெலிகிராபிற்கு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எங்கள் இறைமையில் தலையிட முடியாது.

முஜாஹதீன்கள் வெற்றிகரமாக பாக்கிஸ்தானின் பல நிலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்,குறிப்பிடத்தக்க சேதத்தினை  ஏற்படுத்தியுள்ளனர் என தலிபானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பல இடங்களை நாங்கள் ஆட்டிலறியால் இலக்குவைத்தோம்,பாக்கிஸ்தான் படையினரின் சோதனைச்சாவடிகளையும் சாதனங்களையும் இலக்குவைத்தோம் என தெரிவித்துள்ள அந்த அதிகாரி எங்கள் இறைமையை மீற முடியாது என்பது பாக்கிஸ்தானிற்கு தெரியவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பல படைப்பிரிவுகளை எல்லைக்கு அனுப்பியுள்ளோம் நாங்கள் எதற்கும் தயாராகயுள்ளோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தலிபான் பாக்கிஸ்தானின் பதில் தாக்குதலை எதிர்பார்க்கின்றது பாதுகாப்பு அமைச்சு கடும் எச்சரிக்கை நிலையில் உள்ளது எல்லையில் மேலதிக துருப்பினரைஅனுப்பியுள்ளோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் அணுகுண்டிருந்தாலும் அது பற்றி எங்களிற்கு கவலையில்லை,எங்களிற்கு நம்பிக்கையுள்ளது ஆண்டவன் எங்கள் பக்கத்தில் இருக்கின்றார் என தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் எல்லையை கடந்து பாக்கிஸ்தான் மீது தாக்குதல்களை மேற்கொள்வதை தடுப்பதற்கு ஆப்கானிஸ்தான் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பாக்கிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் இதனை மறுத்துள்ள தலிபான் ஆப்கானை தளமாக பயன்படுத்தி வேறு ஒரு நாட்டின் மீது எந்த அமைப்பும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

2025-02-05 09:43:19
news-image

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ்...

2025-02-05 06:36:32
news-image

ஸ்வீடனில் கல்வி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு...

2025-02-05 03:14:15
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி...

2025-02-04 14:42:03