மீனவர் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் பேச கடற்றொழில் அமைப்புகள் திட்டம்

01 Jan, 2025 | 01:49 PM
image

(நமது நிருபர்)

வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனவரி மாத இறுதியில் சந்தித்துப் பேசுவதற்கு கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. 

அதேவேளையில் எதிர்வரும்  4ஆம் திகதி சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரையும் இவ்வமைப்புகள் சந்தித்துப் பேசவுள்ளன. 

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே இது தொடா்பான தீமானம் எடுக்கப்பட்டது. 

இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சால் முன்மொழியப்படவுள்ள புதிய சட்டமூலத்தை இடைநிறுத்தல், தமிழக அரசியல் தலைமைகளுடன் வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை முன்னெடுப்பதை வலியுறுத்தல், தேசிய மக்கள் சக்தியால் மீனவர் பிரச்சினை தொடர்பில் கோரப்பட்ட கால அவகாசம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைதல், 2025 ஆண்டில் வடமாகாண மீனவர்களின் வாழ்வியல் செயற்திட்டங்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை சந்திப்பதற்கான தீர்மானம் போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. 

கடற்றொழில் அமைச்சா் இராமலிங்கம் சந்திரசேகா் எதிா்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை தம்மைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கிகொடுத்திருப்பதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்  செயலாளா் மொகமட் ஆலம் கேசரிக்குத் தெரிவித்தாா். 

நேற்றைய சந்திப்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஏமன் குமார, வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ், இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம், இணையத்தின் பொருளாளர் ரவீந்திரன் பிரியா, ஊடக பேச்சாளர் அ.அன்னராசா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54