ஜேர்மனியின் அதிதீவிர வலதுசாரி கட்சிக்கு எலொன்மஸ்க் ஆதரவு -ஜேர்மனியை காப்பாற்றுவதற்கான இறுதி வாய்ப்பு என தெரிவிப்பு

01 Jan, 2025 | 12:03 PM
image

ஜேர்மனின் அதிதீவிரவலதுசாரி கட்சிக்கு கோடீஸ்வரரும் எக்ஸ் தள உரிமையாளருமான எலொன் மஸ்க் ஆதரவளித்துள்ளமை ஐரோப்பிய அரசியலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜேர்மனியின் வாரஇறுதிபத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஜேர்மனியின் அதிதீவிரவலதுசாரி கட்சியான ஜேர்மனியின் மாற்றீடு கட்சிக்கு  எலொன் மஸ்க் ஆதரவை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனிக்கான இறுதி நம்பிக்கை  ஜேர்மனியின் ஏஎவ்டி கட்சியே என  எழுதியுள்ள மஸ்க் ஜேர்மனி பொருளாதார கலாச்சார வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கின்றதுஇ குடிவரவை கட்டுப்படுத்தும் கொள்கை மூலமே ஜேர்மனியால் தனது பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்ப முடியும்இதனது தனித்துவ அடையாளத்தை இழக்கும் ஆபத்தை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏஎவ்டி கட்சியை தீவிரவாத கட்சி என வர்ணிப்பவர்கள் கண்டிப்பவர்களிற்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் அந்த கட்சி குறித்து தெரிவிக்கப்படும் விடயங்களால் நீங்கள் அந்த கட்சி குறித்த ஆர்வத்தை இழக்க கூடாதுஇஏவ்டி கட்சி தீவிரவலதுசாரி கட்சி என்பது முற்றிலும் தவறான கருத்து என எலொன்மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஏடிடிவ் கட்சி வரிகள் பொருளாதாரத்தின் மீதான கட்டு;ப்பாடுகளை நீக்குவது போன்ற விடயங்களில் பின்பற்றும் கொள்கையை  எலொன் மஸ்க் பாராட்டியுள்ளார்.

எலொன் மஸ்க்கின் இந்தகட்டுரைக்கு ஜேர்மனியில் 23ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் சான்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிரைடிரிச் மேர்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.

எலொன்மஸ்க்கின் இந்த கட்டுரை ஊடுருவும் பாசாங்குதன்மை கொண்டது எனஅவர் சாடியுள்ளார்.

இடது சாரி சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் லார்ஸ் கிளிங்பெய்ல் எலொன் மஸ்க் ஜேர்மனியை குழப்பத்தில் தள்ள விரும்புகின்றார் என தெரிவித்துள்ளதுடன் அவரை ரஸ்ய ஜனாதிபதியுடன்ஒப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25