விடத்தை எப்படி முறியடிக்கிறார்கள்?

Published By: Robert

23 May, 2017 | 02:49 PM
image

இன்றைய திகதியில் பெற்றோர்கள் திட்டியதாக கூறியும், காதலி அல்லது காதலன் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்றும் சொல்லி ஏராளமான இளைய தலைமுறையினர் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் விடத்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

இதைப்போல் விடத்தை சாப்பிட்டு விட்டு சிகிச்சைக்காக வருபவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவர்கள் சாப்பிட்ட விடம், கல்லீரலைப் பாதிக்கும் முன், விட முறிவு மருந்தை கொடுப்பார்கள். விடம் அருந்தியவரின் உடல் எடைக்கு ஏற்ப, விடமுறிவு மருந்து அளிக்கப்படும். ஒரு சிலருக்கு விட முறிவு மருந்துகளுடன் துணை சிகிச்சைக்களுக்கான மருந்துகளும் கொடுக்கப்படும். 4 மணித்தியாலத்திற்கு ஒரு முறை என விட முறிவு மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்.

இதனிடையே கல்லீரலின் செயல்பாடு மற்றும் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்வார்கள். இந்த பரிசோதனையின் போது கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு அல்லது மாற்றம் தெரிந்தால் அதற்கான சிகிச்சையையும் உடனடியாக மேற்கொள்வார்கள். ஒரு சிலருக்கு மருந்து கேட்கவில்லை என்றால், அதனை மாத்திரை வடிவில் கொடுப்பார்கள். இறுதியாக கல்லீரலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையையும் மேற்கொள்வார்கள். 5 நாள் கழித்து கல்லீரலின் பாதிப்பு குறைந்திருக்கிறது என்றால் மட்டுமே வீட்டிற்கு செல்வதைப் பற்றி பரிசீலிப்பார்கள்.

இந்நிலையில் விடம் சாப்பிட்டால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். அதற்கு முன் கல்லீரலின் பணி குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள். கல்லீரலில் சுரக்கும் ஒரு வேதிப் பொருள், இரத்தம்உறையும் காரணியைக் கட்டுப்படுத்துகிறது. விடம் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இரத்தம் உறையும் தன்மை முற்றாக பாதிக்கப்படுகிறது. இரத்தம் உறையும் தன்மை இழப்பதால், ஜீரணமண்டலம் முழுமையாக பாதிக்கப்படுவதுடன், ஆவனவாய், மூக்கு, காது, வாய் போன்ற உறுப்புகளிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்தை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்படுகிறது.அதனால் எந்த காரணமாக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அறவே விட்டொழியுங்கள். தோல்விகளை கண்டு பயங்கொள்ளாதீர்கள். வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குங்கள்.

Dr.கணேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36