(எம்.வை.எம்.சியாம்)
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதாகத்தெரிவித்து அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவரினால் இந்த போலியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி சார்பில் முறைப்பாட்டை பதிவு செய்த சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவராலேயே இவ்வாறான பொய்யான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியுடன் பல்வேறு விடுதிகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பொய்யான தகவல்களே பகிரப்பட்டுள்ளன. இதில் எந்த உண்மைத்தன்மையும் கிடையாது. அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்கள் இவ்வாறான மிக மோசமான போலி பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கலுக்காக தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மிக மோசமான செயற்பாடாகும்.எனவே குறித்த நபரின் முழுமையான தகவல்களை நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளோம்.இது குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும்.அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM