உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறந்தது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும்.
2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள்.
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணிக்கு, நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
உலக நேரக் கணக்கின்படி, கிரிபாட்டி தீவுக்கு அடுத்த நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஆக்லாந்த நாட்டின் ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM