cnn
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மிகார்ட்டர் தனது 100வது வயதில் காலமாகியுள்ள நிலையில் அவர் சீனாவுடனான பல தசாப்தகால விரோதத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காகவும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியமைக்காகவும் சீனாவில் நினைவுகூரப்பட்டுள்ளார்.
1979ம் ஆண்டு ஜிம்மிகார்ட்டரின் ஆட்சியின் கீழ் இரு நாடுகளிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் அடுத்த தசாப்தங்களில் சீன அமெரிக்க உறவுகளில் ஆழமான மாற்றங்களிற்கு வழிவகுத்தது.
தாய்வான் நீரிணையில் பதற்றம் நிலவுகின்ற இன்றைய சூழலில் அதன் தாக்கம் அதன் தாக்கம் இன்றும் உணரப்படுகின்றது.
பனிப்போர் காலத்தின் போது கார்ட்டர் நிர்வாகம் உறவுகளை சீர் செய்வதற்காக சீனாவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
1949 இல் சீன கம்யுனிஸ்ட்கட்சி ஆட்சியை கைப்பற்றியது முதல் இரு நாடுகளிற்கும்இடையிலான உறவுகள் அக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்தன.
கோமின்டாங் உள்நாட்டு போரில் கம்யுனிஸ்ட்களால் தோற்கடிக்கப்பட்டு சீன நிலப்பரப்பிலிருந்து தாய்வானிற்கு தப்பியோடியதை தொடர்ந்து தைப்பேயில் உள்ள சீன குடியரசையே சீனாவின் சட்டபூர்வ அரசாங்கமாக அமெரிக்கா அங்கீகரித்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் காலத்திலேயே மக்கள் சீன குடியரசுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன- 1972 நிக்சன்சீனாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
எனினும் தைப்பேயிலிருந்து பெய்ஜிங்கிற்கு இராஜதந்திர அந்தஸ்த்தை வழங்கும் அந்த மாற்றத்தை மேற்பார்வை செய்தவர் ஜிம்மி கார்ட்டர்.
1979ம்ஆண்டு அமெரிக்கா தைப்பேயில் உள்ள சீன குடியரசுடனான தனது உறவுகளை முடிவிற்கு கொண்டுவரும,; பெய்ஜிங்கில் உள்ளமக்கள் சீன குடியரசை சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக அங்கீகரிக்கும் என 1978 இல் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
இதற்கு ஏற்ப 1979 ஜனவரி முதலாம் திகதி அமெரிக்காவும் சீன மக்கள் குடியரசும் உத்தியோகபூர்வமாக இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன,இரண்டு நாடுகளினதும் தலைநகரங்களில் தூதரகங்களை திறந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM