எம்மில் சிலருக்கு பருவநிலை மாற்றம் காரணமாக அதாவது குளிர்காலத்தில் தோலில் வறட்சி தன்மை ஏற்பட்டு, அதன் காரணமாக தோல் அரிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு பல்வேறு காரணங்களால் தோல் அரிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் யூர்டிகேரியா எனக் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்கு நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம் என வைத்தியர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு திடீரென்று தோலில் நிறத்தில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக சிலருக்கு அரிப்பு ஏற்படும். வெகு சிலருக்கு இத்தகைய மாற்றமும், அரிப்பும் இருபத்தினான்கு மணி தியாலத்திற்குள் மறைந்துவிடும்.
வெகு சிலருக்கு கண்கள், கன்னங்கள், உதடுகள் , ஆகிய பகுதிகளை சுற்றி வலியுடன் கூடிய வீக்கம் ஏற்பட்டு, அங்கு அரிப்பும் உண்டாகும்.
சிலருக்கு பருவநிலை மாற்றம் காரணமாக அதாவது குளிர் காரணமாக தோலில் அழற்சி பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். இத்தகைய பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக அருகில் இருக்கும் தோல் வைத்திய சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
சிலருக்கு தோலில் தடிப்பு ஏற்பட்டு அங்கு அரிப்பு உண்டாகும். சிலருக்கு நுளம்பு கடியின் காரணமாக அரிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு அவர்கள் பசியாறிய உணவின் ஒவ்வாமை காரணமாகவும் தோலில் அரிப்பு ஏற்படும். இப்படி பல்வேறு துல்லியமாக அவதானிக்க இயலாத காரணங்களால் தோல் அரிப்பு பாதிப்பு ஏற்படுவதால் வைத்தியர்கள் முதலில் இதற்கான காரணத்தை கண்டறிய பிரத்யேக பரிசோதனைகளை பரிந்துரைப்பார்கள்.
இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் உங்களுடைய சமீபத்திய நடவடிக்கைகள், எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகள், மாற்று மருத்துவர் சிகிச்சை முறைகள், உணவு முறைகள், திரவ உணவு முறைகள், குறிப்பாக பால்மா தொடர்பான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கேட்டு அறிந்து அவரை உறுதிப்படுத்திக் கொள்ள தோல் திசு பரிசோதனையை பரிந்துரை செய்வர்.
அதன் பிறகு அத்தகைய அரிப்பு பாதிப்பு ஆறு வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் சிகிச்சையை உடனடியாக அவசியமாகவும் பெற வேண்டும். இந்த தருணத்தில் வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குகிறார்கள். மேலும் இந்த அரிப்பை தூண்டும் காரணிகளை கண்டறிந்து அதனை தவிர்க்குமாறும் பரிந்துரை செய்வார்கள்.
வைத்தியர் தீப்தி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM