தொழினுட்பத்தில் புரட்சி, வியக்க வைக்கும் இந்தியா : நேரடி விசிட்

Published By: Digital Desk 7

31 Dec, 2024 | 05:08 PM
image

எம்.டி. லூசியஸ்

இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளே இலங்கையர்கள் என காலம் காலமாக கூறப்பட்டு வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான வரலாற்று சான்றுகளும் உள்ளன.

குறிப்பாக இந்தியாவில் உள்ள கலை, கலாசாரம், மதம் மற்றும் பாரம்பரியம் போன்றன இலங்கையுடன் ஒருமித்தவையாக காணப்படுகின்றன. அந்தளவுக்கு இரு நாடுகளும் நெருக்கமான உறவை கொண்டுள்ளன.

அந்த வகையில் இந்திய வெளியுறவு அமைச்சினால் அண்மையில் முழெற ஐனெயை Pசழபசயஅஅந அதாவது இந்தியாவை பற்றி அறிந்து கொள்வோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவுக்கு விஜயம் செய்து அங்குள்ள கலை, கலாசாரம் பாரம்பரியம், தொழினுட்படம் போன்ற அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்ளவதாகும்.

79ஆவது முறையாக இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதன்முறையாக இந்தியாவை பூர்விகமாக கொண்டு உலக நாடுகளில் வாழும் ஊடகவியலாளர்கள் இணைத்துகொள்ளப்பட்டனர்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மொரிசியஸ் உள்ளிட்ட 11 நாடுகளிருந்து 27 ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக வீரகேசரி நிறுனத்திலிருந்து மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட இலங்கையிலிருந்து 10 ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தோம்.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் அனுபவத்தையே இங்கு நான் தொடர் கட்டுரையாக வடிவமைத்துள்ளேன்.

கடந்த நவம்பர் 24 ஆம் திகதி இந்தியாவை சென்றடைந்தோம்.

டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்ததும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்மூலம் அவர்களின் அன்பான உபசரிப்பு வெளிப்பட்டது.

இதனையத்து டெல்லியில் உள்ள வெளியுறவு கற்கை நெறிகளுக்கு பெயர்போன சுஷ்மா சுவராஜ் பவன், இந்தியாவின் பெருமைமிகு சுற்றுலாத்தளங்களில் ஒன்றான இந்தியா கேட், முப்படையினரின் கௌவரத்தை பாதுகாக்கும் தேசிய போர் நினைவிடம், இந்தியாவின் உயரிய நிறுவமான இந்திய ரிசவ் வங்கி, மனித வாழ்வியலுக்கு மிக முக்கியமான அகில இந்திய ஆயுர்வேத நிறுனம், தொழினுட்ப புரட்சியில் மேலோங்கி நிற்கும் இந்திய தொழினுட்ப கல்லூரி, இந்திய அதியர் பீடமான பாராளுமன்றம், டெல்லி அருங்காட்சியகம், டெல்லி புராதான கோட்டை, ஹமாயூனின் கல்லறை, ஊடக ஜாம்பவான் நிறுவனங்களான ஏஎன்ஐ, பீடிஐ, தூர்தர்சன் (பொதிகை) ஆகியவற்றுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டோம்.

மேலும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள காதல் சின்னமான தாஜ்மகால், பல பாரம்பரிய கலைகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஆக்ரா கோட்டை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றோம்.

இதேநேரம் மும்பையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கட்டிடம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம், மும்பை மாநகராட்சி கட்டிடம், மும்மை கேட், மற்றும் இந்தியாவின் பொலிவுட் படங்களை உருவாக்கும் பிலிம் சிட்டி, அரபிக் கடலுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ள 22 கிலோ மீட்டர் நீளமுடைய அட்டால் சேது பாலம் ஆகியனவும் பிரமாண்டத்தை பறைசாற்றி நின்றன.

இறுதியாக கிழக்கிந்தியாவின் காசி என்றழைக்கப்படும் ஒடிசாவின் தலைநகராக புவனேஸ்வரத்தை சென்றடைந்தோம். அங்கு கைவினை அருங்காட்சியகமான கலாபூமி, பாரம்பரிய கலை அம்சங்களை கொண்டு காணப்படும் சித்தேஸ்வரர் கோவில், தெற்காசியாவிலேயே மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள காலிங்க மைதானம், தொழினுட்ப கல்வியை வழங்கும் வேல்ட் ஸ்கில் சென்டர் என்பன எம்மை பிரமிக்க வைத்தன.

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை

குறிப்பாக இந்தியா டிஜிட்டல் தொழினுட்பத்தில் அசுரவேகத்தில் பயணிப்பதை கண்கூடாக காணக்கிடைத்தது.

காலம் காலமாக பாராம்பரிய முறையில் பயன்படுத்தி வந்த நாணயத்தாள் மூலமான பணப் பறிமாற்ற சேவைக்கு இந்திய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

அதாவது அனைத்து பணப்பரிமாற்ற Nவைகளையும் டிஜிட்டல் மூலம் செய்யும் தொழினுட்பத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் நடைமுறைப்படுத்தி சாதனைப் படைத்துள்ளது.

எங்கோர் மூலையில் உள்ள சாதாரண குடிமகன் முதல் செல்வந்தர்கள் வரை அனைவரும் இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையை அனுக கூடிய வகையில் உள்ளமை சிறப்பம்சமாகும்.

அதாவது சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் முதல்  ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு இந்த சேவையில் ஈடுபடலாம்.

குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இணைய வசதி கூட இல்லாமல் இந்த டிஜிட்டல் பணபரிமாற்ற சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இதன்மூலம் இந்தியாவின் அனைத்து சேவைகளும் இலகுவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சந்தை தொகுதிகளிலும், வர்த்தக நிலையங்களிலும் வீதியோர கடைகளிலும் இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவை களைகட்டுகின்றது.

சாதாரணமாக நாம் வீதியில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கினால் அங்கிருக்கும் கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்தவன் மூலம் பணத்ததை குறித்த வர்த்தகருக்கு அனுப்பி வைக்க முடியும்.

இனதால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கு இடையிலான சேவை சுமூகமாக காணப்படுகின்றது.

சில நேரங்களில் இலங்கை போன்ற எமது நாடுகளில் பஸ் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் போது மீதி பணத்தை பெறுவது குதிரை கொம்பான விடயமாகும்

ஆனால் இந்தியாவில், குறித்த ஒரு நபருக்கு செலுத்த வேண்டிய பணத் தொகையை சரியான முறையில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையில் ஊடாக செலுத்த முடியும்.

டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையின் மூலம் இந்தியாவில் ஊழழை குறைப்பதே பிரதான இலக்கு என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ சம்பித் பத்ரா எம்மிடம் குறிப்பிட்டார்.

இந்த சேவையில் மூலம் அரசாங்கத்திடம் இருந்து சாதாரண மக்களுக்கு சென்றடைய வேண்டிய நிதி உதவிகள் எந்தவொரு குறைவும் இல்லாமல் நேரடியாக சென்றடைகிறது எனவும் இதற்கு முன்னர் பல அதிகாரிகள் இதனை கையாண்டமையால் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றதாகவும் அவர் எம்மிடம் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையானது இந்தியர்கள் இடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் சில காலமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பெட்டிக்கடை தொடங்கி பெரிய பெரிய அங்காடிகள் வரை அனைத்திலும் டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அபார வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் சுமார் 15,547 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.223 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடைபெற்றுள்ளது. இந்தத் தகவலை நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிர்ந்திருக்கிறது.

#FinMinYearReview2024 என்ற ஹேஷ்டேக்குடன், நாட்டில் யுபிஐ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதோடு யுபிஐ பரிவர்த்தனைகள் உலகளவில் அங்கீகாரம் பெற தொடங்கியிருக்கிறது.

தற்போது யுபிஐ ஆனது டுபாய், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரிசியஸ் போன்ற 7 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடங்கிய டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை உலக அளவில் விரிவடைந்து வருவதை நிதி அமைச்சகத்தின் பதிவு மூலம் தெள்ளத்தெளிவாக காண்பிக்கிறது.

2016-ஆம் ஆண்டு இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) மூலம் தொடங்கப்பட்டது தான்  யுபிஐ   . பல வங்கி கணக்குகளை ஒரே கையடக்கத்தொலைபேசி தளத்தில் இணைத்து இந்தியாவின் கட்டண முறையில் மிகப் பெரிய புரட்சியை யுபிஐ ஏற்படுத்தியிருக்கிறது. பயனர்களுக்கு உடனடியான பணப்பரிவர்த்தனை செலுத்த UPI தளங்கள் உதவிகரமானதாக உள்ளது.

அத்தோடு வணிகர்களுக்கு பணம் செலுத்துவது, கையடக்கத்தொலைபேசி இலக்கத்தின் மூலம் விநாடிகளில் பணம் செலுத்துவது என வங்கிக்கு சென்று பணப்பரிவினை செய்வதை வெகுவாக குறைத்துள்ளது. பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை நகர்த்துவதில் யுபிஐ பெரும் பங்காற்றி வருகிறது.

15,547 கோடி பரிவர்த்தனை! பணத்தை விட்டு UPI-ஐ நாடும் மாக்கள்!

யுபிஐ ஆனது அக்டோபர் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 16.58 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 23.49 இலட்சம் கோடி ஆகும். அதேபோல் அக்டோபர் மாதத்தில் 11.40 பில்லியன் பரிவர்த்தனைகளை செயல்படுத்தி இருக்கிறது. 2023-ஆம் ஆண்டை விட யுபிஐ மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு 2024-ஆம் ஆண்டில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்று இந்தியா சென்று கொண்டிருக்கையில் யுபிஐ தளத்தின் அறிமுகம் பல்வேறு சேவைகளை பெறவும் வசதியானதாக மாறியுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை செலுத்துவது, பணம் அனுப்புவது, பணம் பெறுவது என அனைத்தையும் மக்கள் வீட்டில் இருந்தே செய்கின்றனர். இந்தியாவின் கட்டண முறையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று பரிவர்த்தனை செய்த காலம் கடந்து தற்போது வீட்டில் இருந்தே பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். இனிவரும் காலங்களிலும் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

(தொடரும்.....)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right