பாடகி சைந்தவியின் குரலில் ஒலிக்கும் 'மெஸன்ஜர் ' பட பாடல்

Published By: Digital Desk 2

31 Dec, 2024 | 03:48 PM
image

'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீ ராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்கும் 'மெஸன்ஜர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஒன் சைடா வளர்த்தேன் உள்ளே.. ' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ரமேஷ் இளங்காமணி இயக்கத்தில் உருவாகி வரும் 'மெஸன்ஜர் 'எனும் திரைப்படத்தில் ஸ்ரீ ராம் கார்த்திக் , மனிஷா ஜெஷ்வானி, பாத்திமா நஹும், லிவிங்ஸ்டன் , ஜீவா ரவி , கூல் சுரேஷ் , பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஆர். கோதண்டன், வைஷாலி ரவிச்சந்திரன், ராஜேஸ்வரி, யமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஆர். பால கணேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். அபுபக்கர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை பி வி கே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. விஜயன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற  '' ஒன் சைடா வளர்த்தேன் உள்ளே  இதை எப்படி நானும் சொல்லஎன் ஆசைக்கு இருக்கு எல்ல

அத கண்டேனே உனக்குள்ள...''  எனும்  புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த பாடலை பாடலாசிரியர் ஆர். பிரசாந்த் எழுத , பிரபல பின்னணி பாடகி சைந்தவி பாடியிருக்கிறார். நாயகனை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணின் உணர்வை விவரிக்கும் இந்தப் பாடலில் இடம் பிடித்திருக்கும் வரிகள் ஏராளமான இளம் பெண்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது. சைந்தவியின் குரலும் அபுபக்கரின் மயக்கும் மெட்டும் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்