சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

Published By: Digital Desk 2

31 Dec, 2024 | 03:15 PM
image

எம்மில் சிலர் கடினமாக உழைத்து வாழ்க்கையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டிருப்பர். வெகு சிலர் புத்திசாலித்தனமாக உழைத்து வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றம் கண்டிருப்பார்கள். இந்த இரண்டு குறிப்பிட்ட பிரிவினர்களும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுடைய வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டு, மன மகிழ்ச்சியின்றி தவிப்பர். 

இவர்கள் தாங்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்கான காரணத்தை குறித்து அறிந்து கொள்வதற்காக ஆன்மீக முன்னோர்களையும், ஜோதிட நிபுணர்களையும் அணுகுவர். அவர்களும் உங்களது ஜாதகத்தை துல்லியமாக அவதானித்து சனியின் பிடியில் சிக்கி இருக்கிறீர்கள். 

அதனால் உங்களுடைய முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டிருக்கிறது என விவரிப்பர். உடனடியாக இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், நிவாரணம் பெறுவதற்கும் என்ன வழி? என கேட்பர்.  இந்த தருணத்தில் ஜோதிட நிபுணர்களும், ஆன்மீக முன்னோர்களும் எளிய முறையில் இதற்கான வழிமுறையை பின்வருமாறு குறிப்பிடுவார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் :  எள்ளுருண்டை

நீங்கள் ஏழரை சனியின் பிடியில் சிக்கி இருந்தாலும் அதாவது மகரம், கும்பம், மீனம், ஆகிய ராசியினை சார்ந்தவராக இருந்தாலும், அஷ்டம சனி , அர்த்தாஷ்டம சனி , கண்டக சனி, சனி திசை ,சனி புத்தி , ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருந்தால் உங்களுடைய வாழ்க்கையில் மந்த நிலை ஏற்படும். 

அதாவது வேலைகள் இருந்தாலும் சோம்பல் தன்மை ஏற்பட்டு அதனை நாளை செய்து கொள்ளலாம் நாளை செய்து கொள்ளலாம் என தள்ளி வைத்துக் கொண்டே இருப்பீர். இந்த தாமதமான தள்ளிவைப்பு எண்ணத்தை உண்டாக்குபவர் சனி பகவான். இதன் காரணமாக நாம் சுறுசுறுப்பாகவும் இயல்பாகவும் நாளாந்தம் இருக்க வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள நவகிரக சந்ததிக்குச் சென்று உங்களின் வயது என்னவோ அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் எள்ளுருண்டைகளை வாங்கி அந்த நவகிரக சன்னதியில் உள்ள சனி பகவான் முன் படைத்து பிரார்த்திக்க வேண்டும். 

அதன் பிறகு அந்த எள்ளுருண்டையை அந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தானமாக வழங்கிட வேண்டும். இப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டு வந்தால் சனியின் தாக்கம் குறைந்து சுறுசுறுப்பு அதிகரித்து உழைத்து முன்னேறுவீர்கள்.

சிலருக்கு சனியின் கடுமையான ஆதிக்கம் இருப்பதால் இந்த வழிமுறையை பின்பற்றுவதிலும் தடை ஏற்படலாம். இவர்கள் சனிக்கிழமைகளில் பசுவிற்கு குறிப்பாக கருமை வண்ணம் கொண்ட பசுவிற்கு வெல்லம் கலந்த எள்ளுருண்டையை தானமாக பசியாற வழங்கலாம். இதன் மூலமாகவும் உங்களுடைய சனி பகவானின் தாக்கம் குறைந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.

எம்மில் சிலர் சனிக்கிழமைகளில் கைகளில் எள்ளுருண்டையும், வெல்லத்தையும் வைத்திருப்பார்கள். ஆனால் பசுமாடு அதிலும் குறிப்பாக கருப்பு வண்ண பசுமாடு அவர்களின் கண்களுக்கு அகப்படாது. இந்நிலையில் கையில் இருக்கும் எள்ளுருண்டைகளை உங்களுக்கு தெரிந்த எறும்பு புற்றுகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். புற்றில் இருக்கும் எறும்புகள் இந்த எள்ளுருண்டைகளை எடுத்துச் சென்றால் இதன் காரணமாகவே சனியின் பாதிப்பு குறைந்து முன்னேற்றம் சாத்தியமாகும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14