அநுராதபுரம் பொலிஸ் வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன பரிசோதனையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 78 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என வலய போக்குவரத்து பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட வாகன பரிசோதனைக்கு அமைவாக கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அநுராதபுரம் பொலிஸ் வலயத்தின் 28 பொலிஸ் நிலையங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன பரிசோதனையின் போதே மதுபோதையில் வாகனம் செலுத்திய 78 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்தினை ஏற்படுத்தும் வகையில் கவனயீனமான முறையில் வாகனம் செலுத்துதல் அதிக வேகத்தில் வாகனத்தினை செலுத்திய மற்றும் ஆசண பாதுகாப்பு பட்டி அணியாமல் வாகனம் செலுத்திய வீதி சட்டதிட்டங்களை மீறிய வேறு வாகன குற்றங்கள் தொடர்பாக 2,000 த்திற்கும் அதிகமானவர்களுக்கு எதிராக சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது என அநுராதபுரம் வலய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM