காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சபியாவை இஸ்ரேல் விடுதலை செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவரது நலன் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கடும் கரிசனையையும் வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 27ம் திகதி கமால் அத்வான் மருத்துவமனையின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சபியா மற்றும் ஏனையவர்கள் குறித்தும் அவர்களின் நலன்கள் குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் சமூக ஊடக பதிவில்தெரிவித்துள்ளார்.
மருத்துவரை நிபந்தனையற்ற விதத்தில் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காசாவின் அழிக்கப்பட்ட சுகாதாரதுறையின் குரலாக ஹ_சாம் அபு சபியா விளங்கினார்,அவர் மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்து வேண்டுகோள்களை விடுத்தார்,தனது மகன் கொல்லப்பட்ட பின்னரும் மிகவும் மோசமான ஆபத்தான சூழ்நிலையிலும் அவர் பணிபுரிந்தார் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான இனப்படுகொலையை ஆரம்பித்தது முதல் இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் 100க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களை கைதுசெய்துள்ளது நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.என தெரிவித்துள்ள கலமார்ட் சுகாதார பணியாளர்கள் சித்திரவதைகளிற்கும் மோசமான நடத்தைகளிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்,வெளி உலக தொடர்பு இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபையி;ன செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையும் மருத்துவ பணியாளர்களும் இலக்குகள் இல்லை,என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM