ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் , மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது

31 Dec, 2024 | 11:40 AM
image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை  (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு - 14 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்தியாவின் பெங்களூர் நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் 125 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரான வர்த்தகர் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலைங்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54