(ப.பன்னீர்செல்வம்)

அரசாங்கம் பௌத்த குருமார்களுக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சி குறித்து அனைத்து பௌத்த நிலையங்களும் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது,

அரசினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள பௌத்த குருமார்களுக்கான ஒழுக்க சட்டக் கோவை பிரேரணையானது இலங்கையின் கலாசார பாரம்பரியத்தின் தனித்துவத்திற்கு எதிரானதாகும். 

 பிக்குகளை பிக்குத் தலைமைகளே நிர்வகிக்க வேண்டும்.  அதைவிடுத்து பிக்குவின் காவியுடையை சட்டத்தரணியால் அகற்றி வெளியேற்ற முடியாது. 

வரலாற்றுக் காலம் தொடக்கம் நாட்டுக்கு எதிராக சவால்கள் தலைதூக்கியபோது பௌத்த குருமாரே முகம் கொடுத்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.