(நெவில் அன்தனி)
மவுன்ட் மௌங்கானுய், பே ஓவல் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டஃபியின் அற்புதமான பந்துவீச்சின் உதவியுடன் இலங்கையை 45 ஓட்டங்களால் நியூஸிலாந்து இலகுவாக வெற்றி கொண்டது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை, ஒரு போட்டி மீதிமிருக்க 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து கைப்பற்றியது.
இதே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் போன்று இந்தப் போட்டியிலும் மத்திய வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் அல்லது ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததால் இலங்கை படுதோல்வி அடைந்து தொடரையும் பறிகொடுத்தது.
இந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும் இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க, முதல் இரண்டு போட்டிகளிலும் களத்தடுப்பை தெரிவுசெய்தது ஆச்சரியத்தை தோற்றுவித்துள்ளது.
இனறு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 4.3 ஓவர்களில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து குசல் பெரேராவுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 39 ஓட்டங்களைப் பகிர்ந்த பெத்தும் நிஸ்ஸன்க 37 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்த கமிந்து மெண்டிஸ் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கமால் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (97 - 3 விக்.)
அதன் பின்னர், குசல் பெரேராவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் 4ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்ட முயற்சித்தனர்.
ஆனால், அதன் பின்னர் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 7 விக்கெட்கள் சரிய இலங்கை மீண்டும் தோல்வி அடைந்தது.
குசல் பெரேரா 48 ஓட்டங்களையும் சரித் அசலன்க 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்தவீச்சில் ஜேக்கப் டபி 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெட் ஹென்றி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைக் குவித்தது.
மொத்த எண்ணிக்கை 13 ஓட்டங்களாக இருந்தபோது ரச்சின் ரவிந்த்ரா (1) ஆட்டம் இழந்தார்.
ஆனால், டிம் ரொபின்சன், மார்க் செப்மன் ஆகிய இருவரும் அதிரடி கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 41 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
டிம் ரொபின்சன் 34 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களையும் மார்க் செப்மன் 29 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிச்செல் ஹே 19 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
மிச்செல் ஹே, மைக்கல் ப்றேஸ்வெல் (5 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 15 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.
க்ளென் பிலிப்ஸ் (23), டெரில் மிச்செல் (18) ஆகிய இருவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன் : மைக்கல் ஹே
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM