(நெவில் அன்தனி)
ஐசிசியினால் வருடாந்தம் வழங்கப்படும் மூன்று பிரதான கிரிக்கெட் விருதுகளில் இரண்டுக்கான குறும்பட்டியலில் இலங்கையின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்துவும் பிரேரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் ஏற்கனவே வேறு ஐசிசி விருதுகளுக்கும் பிரேரிக்கப்பட்ட நிலையில் பிரதான விருதுகளுக்கும் பிரேரிக்கப்பட்டுள்ளனர்.
வருடந்தின் அதிசிறந்த முன்னேறிவரும் வீரருக்கான குறும்பட்டியலில் இடம்பெற்ற கமிந்து மெண்டிஸின் பெயர் வருடத்தின் அதிசிந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்குரிய குறும்பட்டியலிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்ளின்ட் விருதுக்குரிய குறும்பட்டியலில் சமரி அத்தப்பத்துவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.
அவருடன் நியூஸிலாந்தின் அமேலியா கேர், அவுஸ்திரேலியாவின் அனாபெல் சதர்லண்ட், தென் ஆபிரிக்காவின் லோரா வுல்வார்ட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை, வருடத்தின் அதிசிறந்த ரி20 கிரிக்கெட் வீராங்கனை ஆகிய விருதுகளுக்கும் சமரி அத்தபத்து பிரேரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு கமிந்து மெண்டிஸுடன் ஹெரி ப்றூக் (இங்கிலாந்து), ஜஸ்ப்ரிட் பும்ரா (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து) ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கான குறும்பட்டியலில் ஹெரி ப்றூக் (இங்கிலாந்து), ஜஸ்ப்ரிட் பும்ரா (இந்தியா), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து) ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM