2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள்

30 Dec, 2024 | 05:51 PM
image

மேஷம்

தைரியமும் துணிச்சலும் கொண்டு எதையும் செய்யும் மேஷ ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதும், ராசிநாதன் செவ்வாய் நீசம் பெற்று அமர்வதும், பொருளாதாரத்திலும் சுய முயற்சியிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களின் ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கியஸ்தானத்தில் சந்திரனும் சூரியனும் சேர்ந்திருப்பதால்.. உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் தொழிலிலும் வருமானத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

உறுதியான உங்களின் செயல்பாடுகளாலும், தனித்தன்மையுடன் தெளிவான முடிவுகளாலும் உங்களுக்கு ஊக்கம் உண்டாகும். குறுகிய காலத்தில் நீங்கள் அடையவோ... நடந்திடும் என்றோ.. நினைக்காமல் தொடர்ந்து செயலில் உறுதியாக செயற்பட்டால் நீங்கள் எண்ணிய வாழ்க்கை ஈடேறும். பாதுகாப்பு கருதி சில விடயங்களில் நீங்கள் செயல்படும்போது உங்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டாகும். 

மே மாதத்துக்கு பின்பு சில காரியங்கள் உங்களின் எண்ணம் போல் சிறப்பாக அமையும். விளையாட்டுத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேறுவீர். வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளிலும் துணிவுடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். 

பொது நலன் கருதி நீங்கள் செய்துவரும் காரியங்களில் பாராட்டு பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் உடனடியாக செயல்படுவதும், தொடர் முயற்சிகள் மூலம் இந்த ஆண்டு முழுவதும் உழைத்தால் உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். எதிர்பார்ப்புகள் சரியாக நிறைவேறும்.

அதிர்ஷ்ட மாதங்கள் :  ஜனவரி, ஏப்ரல், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர்

அதிர்ஷ்ட எண்கள் : 1, 3, 4,

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், சிவப்பு

இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு விளக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு சிவப்பு அரளி பூ வைத்து தொடர்ந்து வேண்டிக்கொள்ள உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும்.

ரிஷபம் 

அனைவரிடத்திலும் இனிமையாக பேசி செயலில் இறங்கும் ரிஷப ராசி வாசகர்களே!

உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் உங்களின் யோகாதிபதி சனியுடன் தொழில் ஸ்தானத்தில் அமர்வதும், பஞ்சமாதிபதி புதனின் பார்வை ராசியில் படுவதும், செய்யும் தொழிலில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்துகொள்வீர்கள். உடன் இருக்கும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் நல்ல நண்பர்களின் உதவியுடனும் செயல்படுவீர்கள். 

ஜென்ம குருவால் சில காலம் மன ரீதியான பிரச்சினைகள் வந்து மறையும். எதிர்வரும் மே மாதத்துக்கு பின்பு தனஸ்தானத்தில் குரு அமரும்போது நல்ல வளமான சூழ்நிலை உருவாகும். லாபஸ்தானத்தில் ராகு அமர்வது புதிய தொழில் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். ஆன்லைன் வர்த்தக வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். 

அரசியலில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களின் மூலம் சிலரின் மனநிலை சரியாகாமல் போகும். உடல் நலனில் கவனம் செலுத்தி ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்துக்கொள்வீர்கள். பொது வாழ்வி்ல் சிலர் ஆரவம் மிகுந்து செயற்படுவீர்கள். மாற்றங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். 

பெண்களுக்கு திடீர் பண வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். காலமாற்றத்துக்கு தகுந்தபடி உங்களின் சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். விவசாயத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். பால் வளம் நன்மையைத் தரும். எதிரிகளிடமிருந்து சில காலம் தள்ளி இருப்பது நல்லது விவேகமும் உங்களை வெற்றி பெறச் செய்யும் என்பதால் இந்த ஆண்டு முழுவதும் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட மாதங்கள் :  பெப்ரவரி, மார்ச், மே, ஒகஸ்ட், ஒக்டோபர், டிசம்பர்

அதிர்ஷ்ட எண்கள் : 3, 4, 6, 8,

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், மஞ்சள்.

இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: 

வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மகாலெட்சுமி ஸ்லோகம் சொல்லி நெய் தீபமேற்றி தாமரை பூ வைத்து தொடர்ந்து வேண்டிக்கொள்ள சகலவிதமான காரியமும் கைகூடும். 

மிதுனம்

எடுத்த காரியத்தை எளிதில் செயல்படுத்தி, வளம் பெறும் மிதுன ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் ஆறாமிடமான விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பதும் குரு பார்வை பெறுவதும் வங்கி மூலம் கடன் பெற்று செய்யும் தொழிலை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்று தரும். புதிய முயற்சிகளுக்கு எளிதில் நற்பலன்கள் பெறுவீர்கள்.

உங்களின் ராசிக்கு பனிரெண்டில் குருவும், நான்கில் கேதுவும் அமர்ந்திருப்பது சரியானபடி தீர்மானம் செய்யாமல் பிறரின் மீது நம்பிக்கை வைத்து தொழில் முதலீடு செய்தால் ஏதாவதொரு வழியில் சிரமப்பட வேண்டிவரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். வெளிப்படையான உங்களின் பேச்சு சில நேரம் தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும்.

தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்வது தனிப்பட்ட உங்களின் செயல்பாடுகள் மூலம் வளர்ச்சியை பெறும் வாய்ப்பாக அமையும். உங்களின் பாக்கியஸ்தானத்தில் பாக்கியாதிபதி சனியுடன், சுக்கிரன் இணைவு பெற்று அமர்வது உங்கள் அனைத்து முயற்சிகளுக்கு பக்கபலமாக நன்மைகள் உண்டாகும்.

திட்டமிட்ட சில காரியங்கள் தடைப்பட்டாலும் எதிர்பார்த்தபடி எல்லாம் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களும் எதிர்பார்த்த நன்மைகளும் விரைவில் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சியும் சிலருக்கு வேலைவாய்ப்பும் அமையப் பெறுவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மேன்மை பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, மே, ஜூன், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, நீலம்.

இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமைகளில் நவக்கிரக குருவுக்கு மூன்று நெய் தீபமேற்றி, மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி வேண்டிக்கொள்ள உங்களின் எண்ணம் எல்லாம் ஈடேறும்.

கடகம்

காலத்தையும் சூழ்நிலையும் அறிந்து தன்னை மேம்படுத்திக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்ப்பதும், பாக்கியஸ்தானத்தில் புதன் அமர்வதும், உங்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். ராசிநாதன் ஆறாமிடத்தில் அமர்வதால் ஏதாவது புதிய கடன் பெறுவது, பழைய கடனை அடைக்க முயற்சி செய்வது போன்ற காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள்.

உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வதால், கேது பெயர்ச்சி வரை உங்களின் எதிர்கால நன்மைகளுக்கான முயற்சிகள் வெற்றியை பெற்று தரும். அதன் பின்பு பேச்சை குறைத்துக்கொண்டு செயலில் இறங்குவீர்கள். குரு பார்வை கேதுவுடன் இணைவதால் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் எதிர்பாராத திருப்பமும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும்.

அரசியலிலும் பொது வாழ்விலும் சிறந்த முன்னேற்றம் காண்பதுடன் பழைய நண்பர்களின் தொடர்பு மூலம் நன்மைகள் பல உண்டாகும். உங்களின் யோகாதிபதி செவ்வாய் ராசியில் அமர்ந்து நீசம் பெற்றாலும், உங்களுக்கு ஏதாவதொரு வழிகளில் ஒத்துழைப்பு தருவதுடன் கஷ்டப்படும் காலங்களில் உதவிகளை கிடைக்கச் செய்வார். பாக்கியஸ்தானத்தில் ராகு அமர்ந்து குருவை பார்ப்பதும், கூட்டுத் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும், வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டாகும். 

தொழில் சார்ந்து புதிய தொடர்புகள் உண்டாகும். உண்மையான லட்சியங்களுக்கு எந்த தடையும் வராது. அதே நேரத்தில் நேர்மைக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடும்போது.. பிரச்சினைகள் வேறு மாதிரி திசை திரும்பி, கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். கலைத்துறையினருக்கு சில கஷ்டங்கள் நீங்கி, படிப்படியாக நன்மை உண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் உங்களின் செயல்கள் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை தன்னிறைவு பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9.

அதிர்ஷ்ட மாதங்கள்: மார்ச், ஏப்ரல், ஜூலை, செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஒரெஞ்ச்

இந்த ஆண்டு முழுவதும் வழிபட வேண்டிய தெய்வங்கள் : திங்கட்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்து வில்வ இலை அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வணங்கி வர உங்களின் சகல பிரச்சினைகளும் தீர்ந்து நன்மை அடைவீர்கள்.

சிம்மம்

தைரியமும் துணிச்சலும் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் பஞ்சமாதிபதி குரு வீட்டில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதும், குரு மே மாதம் வரை தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் தொழிலில் பல சிரமங்கள் உண்டாகும். செய்யும் தொழிலில் பல முயற்சிகள் தடைப்பட்டாலும் உங்களின் தொழிலில் பெரிய பாதிப்பை தராது. எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக அமையும்.

உங்களின் ஏழாம் அதிபதி சனி, களத்திர ஸ்தானத்தில் சுக்கிரனுடன் இணைவதால் கணவன் - மனைவி இடையேயான உறவில் சிறு சிறு சச்சரவுகளை வரும். மனைவியுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களின் யோகாதிபதி செவ்வாய் விரையஸ்தானத்தில் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தாலும் படிப்படியாக நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள். 

மே மாதத்திலிருந்து உங்களின் வாழ்க்கை சூழ்நிலை சிறப்பாக அமையும். கிடைத்த எந்த வாய்ப்பையும் வளப்படுத்திக்கொள்வீர்கள். நினைத்த காரியம் கைகூடும். அரசியலிலும் உத்தியோகத்திலும் திறம்பட செயல்படுவீர்கள். உங்களின் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு பல வாய்ப்புகள் வரும். அதனை பயன்படுத்திக்கொள்வீர்கள்.

முதலீடுகள் இல்லாத தொழில் வாய்ப்பைப் பெறுவீர்கள். கொடுத்த சில வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் எடுத்துக்கொண்டாலும் விரைவில் நிறைவேற்றி வைப்பீர்கள். பெண்கள் பிடிவாத குணத்தை விட்டுவிட்டு அனுசரித்துச் செல்வீர்கள். வாகன வசதிகளை பெறுவீர்கள். பதிலுக்கு பதில் பேசுவதை தவிர்த்து பொறுமையுடன் செயல்பட்டால் எல்லா வெற்றியை தரும்.

மாணவர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும். சிலருக்கு அவர்கள் விரும்பிய கல்வி பிரிவு கிடைக்கப் பெறுவீர்கள். தனஸ்தானத்தில் கேது இந்த ஆண்டு பெயர்ச்சி ஆகும் போது இன்னும் பல திறமைகளை வளர்த்து கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள். செயலில் உறுதியும் மேன்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 3, 6.

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, ஏப்ரல், மே, ஜூன், ஒகஸ்ட், டிசம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், வெண்மை.

இந்த ஆண்டு முழுவதும் வணங்க வேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், தெரு நாய்களுக்கு பிஸ்கற்று, சாப்பாடு கொடுத்து, இதனை தொடர்ந்து செய்து வருபவருக்கு இனிமையான வாழ்க்கை சூழ்நிலை அமையும்.

கன்னி

தன் கடமையை உணர்ந்து செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வை மே மாதம் வரை இருப்பதால் உங்களின் காரியங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். சாதிக்க நினைத்து நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் அவசரமின்றி செயல்படுவதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள்.

தொழிலில் உங்களின் கவனம் சிறப்பாக இருக்கும். அதிகபடியான முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும்.. ஆண்டின் முற்பகுதியில் காண்பீர்கள்.  பின்பு தொழிலில் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிலையற்ற தன்மை உண்டாகும். அதுபோல உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் வேலையில் கவனமின்மையால் சில பாதிப்புகள் வரலாம் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு மேல் உள்ளவருக்கு பதில் சொல்லும் நிலை உண்டாகும். ஜோதிடத்தை தொழிலாக பார்ப்பவர்களுக்கு சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். உங்களின் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் அறிவாற்றலால் எத்தகைய பிரச்சனையும் ஜெயித்து விடுவீர்கள்.

உங்களுக்கு மிக நெருக்கமானகர்களிடம் எதையும் மனம் திறந்து உங்களின் ரகசிய விடயங்களை சொல்லிவிடாதீர்கள். அதனால் உங்களுக்கு சில பாதிப்புகள் உண்டாகலாம். கலைஞர்களின் வாழ்வில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் தொடர் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். 

நீங்கள் எந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காண்பீர்களோ.. அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையும். சொந்த காலில் இருக்க விரும்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பும் அமையும். அதை பயன்படுத்தி முன்னேற்றம் காணுங்கள். மொத்ததில் இந்த ஆண்டு உங்களின் வளர்ச்சியிலும், பொருளாதார நிலையிலும் தன்னிறைவு உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 3, 9.

அதிர்ஷ்ட மாதங்கள்: பெப்ரவரி, மார்ச், ஜூன், ஒகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், நீலம்.

இந்த ஆண்டு முழுவதும் வழிபட வேண்டிய தெய்வங்கள்: வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு வெள்ளை நிற பூ வைத்து நெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ளவும், ஞாயிறுதோறும் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர சகல காரியங்களும் சிறப்பாக அமையும்.

துலாம்

எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க நினைக்கும் துலாம் ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் யோகாதிபதியுடன் இணைந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் மிக சிறப்பாக அமைந்து, வளம் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் விற்பனை நல்ல வருமானத்தை பெற்றுத் தரும். ராசிக்கு மூன்றாமிடத்தில் லாபாதிபதியுடன் தொழில் ஸ்தானாதிபதி இணைவு பெற்றிருப்பதால் தொழிலில் தடையற்ற வருமானம் பெறுவீர்கள்.

மேலும் ஒன்லைன் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வீர்கள். உங்களின் ராசிக்கு களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசிநாதனை பார்ப்பதால், கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். கருத்து வேறுபாடுகளை களைந்து, உறவுகளை பலபடுத்திக்கொள்வீர்கள். எட்டாமிடத்தில் குரு.. மே மாதம் வரை இருப்பதால் பொருளாதார வளர்ச்சி சற்று குறைவாக இருக்கும். ஆண்டு மத்தியில் வளமான வளர்ச்சியையும் பொருளாதார மேன்மையும் அடைவீர்கள்.

கலைத்துறையினர் தன் கலை வடிவம் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் செயலில் திறம்பட செய்வீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக எல்லாம் நடக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளை சில காலம் தவிர்ப்பது மிக நல்லது. 

பொது வாழ்வில் பிறர் நன்மை அடைய வேண்டும் என்று நினைக்கும் உங்களின் எண்ணம் நினைத்தபடி நல்ல காரியங்களை சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு கல்வி அவர்களின் விருப்பப்படி அமையும். திருமணம், தமிழ் புத்தாண்டு பிறந்த பிறகு வரன் சிறப்பாக அமையும். ஆற்றலுக்கு தகுந்தபடி எந்த செயலையும் தள்ளிப் போடாமல் உடனே செய்து முடிப்பீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு எல்லா விதமான வழிகளில் வளர்ச்சியை பெற்றுத்தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7, 9.

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, பெப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர், நவம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், மஞ்சள்.

இந்த ஆண்டு முழுவதும் வணங்க வேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபம் ஏற்றி மஞ்சள் வஸ்திரம் சாற்றி வேண்டிக்கொள்ள, இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார மேன்மையும் கிடைக்கும்.

விருச்சிகம்

எதையும் சாதித்துக் காட்டும் விருச்சிக ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு.. ஆண்டின் முற்பகுதியில் நினைத்தபடி செயல்படுவீர்கள். அடுத்த பிற்பகுதியில் புதிய சில முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இது பற்றி சுய ஜாதக அமைப்பை பற்றி தெரிந்து, தொழில் துவங்குவது நல்லது. உங்களின் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் துவக்கத்தில் இருப்பதால் தொழிலில் வளர்ச்சியைப் பெறுவீர்கள்.

உங்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி, இது நல்லது.. அது நல்லது.. என்று சொல்லி வருபவர்களை நம்பி முதலீடு போடாமல், ஆய்வு செய்து அதன் பின்பு முடிவெடுங்கள். உங்களுக்கு தற்சமயம் அர்த்தாஷ்டம சனியால் பத்தாம் பார்வையாக சனி ராசியை பார்ப்பது.. குரு பார்வை இருக்கும் வரை எந்த பாதிப்பையும் தராது. குரு வரும் மே மாதம் பெயர்ச்சியாகும் போது உங்களின் பலம் குறையும். அந்த தருணத்தில் பிடிவாதத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் அனுசரித்து நடந்துகொள்ளும் போது.. நற்பலன்களை பெறுவீர்கள்.

விளையாட்டுத்துறையிலும் கலைத்துறையிலும் சிலருக்கு சாதித்து காட்டும்படி வாய்ப்பு கிட்டும். ஒரு சிலருக்கு மறுமணம் நடக்கும். புனிதமான உங்களின் ஆன்மீக பயணம் சிறப்பாக அமையும். உங்களின் ராசிநாதன் செவ்வாய் உங்களுக்குரிய பயணத்தை சிறப்பாக நடத்தி கொடுப்பார். தாயார் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். அடிக்கடி உடல் நல குறைவு உண்டாகும். 

புதிய நண்பர்களின் தொடர்பும் பழக்கமும் உண்டாகும். புதிய அனுபவங்களை பற்றி தெரிந்துகொள்வீர்கள். எதை செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும்படி செய்வீர்கள். சாதனைகளை செய்ய துடித்து கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அமையும். அதனை பயன்படுத்தி கொள்வீர்கள். லாபஸ்தானத்தில் கேது அமர்ந்து உங்களுக்கு பல நல்ல காரியத்தை நடத்தி தருவார். இந்த ஆண்டு உங்களின் வாழ்வில் புதிய அனுபவத்தை பெற்று தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 5.

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, பெப்ரவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், டிசம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், சிவப்பு.

இந்த ஆண்டு முழுவதும் வணங்க வேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை ராகு காலத்தில் தொடர்ந்து மூன்று நல்லெண்ணெய் தீபம் பைரவருக்கு ஏற்றி வழிபாடு செய்து, சூலத்தில் மூன்று எலுமிச்சம்பழத்தை குத்தி வேண்டிக்கொள்ள சகல காரியமும் நினைத்தபடி நடக்கும்.

தனுசு

வாழ்க்கையை சுயமாக வடிவமைத்துக்கொள்ளும் தனுசு ராசி வாசகர்களே! 

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு யோகாதிபதி சூரியன் துவக்கத்தில் ராசியில் அமர்வது சிறப்பான பலனாக அமையும். இந்த ஆண்டு பலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலில் ஈடுபாடு கொண்டிருப்பீர். சிலருக்கு நல்ல பதவியும், அந்தஸ்தும் உண்டாகும். நினைத்தபடி நினைத்த சூழ்நிலைகளில்  வெற்றியைப் பெற நீங்கள் முயற்சிகள் செய்தால் பலன் உண்டு.

உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனி அமர்வதும், லாபாதிபதி சுக்கிரன் இணைவு பெறுவதும் யோக பலன்களை பெற்று தரும். உங்களின் வளர்ச்சிக்கு வழிகிடைக்கும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். குழப்பமான சூழ்நிலைகள் மறையும். எதிர்கால திட்டங்களுக்கு பலன் அளிக்கும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமையும். புதிய செயல்பாடுகள் உங்களை மேலும் ஊக்கப்படுத்தும். புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். 

சொந்த தொழில் செய்து வருபவருக்கு லாபமும் நஷ்டமும் கலந்தே வரும். ஓன்லைன் வர்த்தகம் சுமாரான பலனைப் பெற்று தரும். உங்களின் ராசிநாதன் முற்பகுதியில் விரைய தன ஸ்தானங்களை பார்ப்பதால் பாதிப்புகள் இருக்காது. பிற்பகுதியில் ராசியை பார்ப்பதால்.. குரு அருள் முழுமையாக கிடைப்பதால் எல்லா விதமான வளமும் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல வேலை, வருமான வாய்ப்புகள். பொருளாதார மேன்மை அடைய பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு தொடர் வாய்ப்புகள் அமையும். நிறைவான பொருளாதார சூழ்நிலைகள் அமையும். சிறப்பான ஆண்டாக இந்த ஆண்டு அமையும். தொழில் ஸ்தானத்தில் கேது இருக்கும் வரையில் தொழிலில் நன்றாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் வளர்ச்சியைப் பெறுவீர்கள். வரும் ஆண்டு உங்களின் விருப்பமான கல்வி வாய்ப்பைப் பெறுவீர்கள். எல்லா வளமும், நலமும் பெறும் வாய்ப்பு அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 8, 9.

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஜூலை, ஒகஸ்ட், செப்டம்பர், நவம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், சிவப்பு.

இந்த ஆண்டு முழுவதும் வணங்க வேண்டிய தெய்வங்கள்: புதன்கிழமைகளில் நரசிம்மர், பெருமாள் வழிபாடு செய்து துளசி மாலை போட்டு நெய் தீபமேற்றி வணங்கி வர உங்களின் வேண்டுதல் நிறைவேறும். சுப்ரமணியன் வழிபாடு உங்களுக்கு மனவலிமையை பெற்று தரும்.

மகரம்

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லி செயல்படும் மகர ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் யோகாதிபதி சுக்கிரனுடன் அமர்ந்திருப்பது நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் நீங்கி நன்மை அடைவீர்கள். முயற்சி ஸ்தானத்தில் ராகு அமர்வது உங்களின் முயற்சிக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அன்னிய உதவிகள் பெறுவீர்கள். சுகஸ்தானத்தில் அதிபதி செவ்வாய் உங்களின் ராசியில் உச்சம் பெறுவதாலும் செவ்வாய் உங்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும். 

முதலீடுகள் இல்லாத தொழிலில் ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். அட்டமாதிபதி சூரியன் விரையத்தில் அமர்வதால் சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியலில் ஈடுபாடு கொண்டவருக்கு.. முக்கிய பிரமுகர் சந்திப்பு கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் நடந்த குழப்பமும் சர்ச்சையும் இந்த ஆண்டு முடிவக்கு வரும். 

பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு ஊக்கத்தை பெற்றுத் தரும். சரியான பாதைகளை தேர்வு செய்து வழிநடத்தி செல்வீர்கள். பொது வாழ்விலும், தொழிற்சங்க நிர்வாக பதவிலும் உங்களின் செயல்பாடுகள் ஏற்றத்தை பெற்று தரும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பல வகையில் பாடுபடுவீர்கள். உங்களின் பாக்கியாதிபதி புதன் லாபஸ்தானத்தில் அமர்வதும், குரு பார்வை ராசியில் படுவதும் உங்களுக்கு சரியான வாழ்க்கை சூழ்நிலையை உருவாக்கும். 

இந்த ஆண்டு உங்களுக்கு பல நல்வழிகளை காட்டி தொழிலிலும், உத்தியோகத்திலும் வளம் பெற செய்யும். கலைத்துறையினர் புதிய நிகழ்ச்சிகளில் காற்று கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் தடை நீங்கி, கல்வியின் புதிய பரிணாமத்தை உண்டாக்கும். எளிதில் எதையும் செய்துவிடுவோம் என்று நினைத்து செயல்பட்டால் அதில் வெற்றி பெற முடியாது. கஷ்டப்பட்டு செய்தால் எதையும் வெற்றி பெற முடியும். நம்பி செயல்பட்டால் எல்லாம் நன்மையும் உண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் வெற்றியும் நன்மையும் சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 8, 9.

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, பெப்ரவரி, ஜூலை, ஒகஸ்ட், செப்டம்பர், நவம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, ஒரெஞ்ச்.

இந்த ஆண்டு முழுவதும் வணங்க வேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளிலும் ஞாயிறுகளிலும் ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர செய்யும் தொழிலும், உத்தியோகத்திலும் இன்னல்கள் தீர்ந்து நன்மை கிடைக்கும்.

கும்பம்

நற்குணமும் நற்செயலும் கொண்டு விளங்கும் கும்ப ராசிவாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசி ராசிநாதன் ராசியிலும், யோகாதிபதியாகிய சுக்கிரனுடன் இணைவு பெறுவதும் லாபாதிபதி வீட்டில் சூரியனும் சந்திரனும் இணைவு பெறுவதும். உங்களின் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் நீங்கள் நினைத்தபடி செயல்பட வேண்டுமென்று நினைப்பீர்கள். சில நேரம் அதில் மாற்ற உண்டாகும்.

உங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். முதலீடுகள் இல்லாத தொழிலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இரண்டாமிட ராகுவும் எட்டாமிட கேதுவும் உங்களை ஒரு இடத்தில் இருக்க விடமாட்டார்கள். காலத்தை வீண்செய்யாமல் எதையாவது செய்து கொண்டே இருக்கவேண்டும். குரு உங்களின் விரயஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதால் தொழிலில் ஓரளவு உங்களுக்கு பாதிப்புகள் இன்றி செயல்படுவார்கள்.

எதையும் முன்கூட்டியே அறிந்து, அதற்கு தகுந்தபடி உங்களின் கடமையை செய்து வருவீர்கள். ஆறாமிடத்தின் செவ்வாய் உங்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி தருவார். குணம் இருக்கும் இடத்தில் தான் கோபம் இருக்கும் என்பது போல.. நீங்கள் யார் மீது கோபம் கொண்டாலும் அது அவர் மீது அக்கறை கொண்டு செயல்படுவதாக அமையும்.

தொழில் ஸ்தானத்தின் பஞ்சாமாதிபதி புதன் அமர்ந்து தொழிலில் முன்னேற்றம் அடைய செய்ய உதவி செய்கிறார். ஓன்லைன் வர்த்தகத்தில் முதலீடு, லாபகரமான சூழ்நிலை அமையும். கலைத்துறையினருக்கு ஆர்வம் இருந்தாலும் சனியின் ஆசியில்லாமல்  கலைத்துறையினர் எதையும் சாதிக்க மாட்டீர்கள்.

முன் யோசனைகள்படி நடந்துகொள்வீர்கள். லாபஸ்தானாதிபதி சுகஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உடல்நலன் ஒத்துழைப்பு தருவது கடினமாக இருக்கும். புதிய முயற்சிகள் தற்காலிமாக நிறுத்தி வைப்பது நல்லது. சகோதரர்களின் உறவுகள் சிறப்பாக இருக்காது. பொது வாழ்விலும், அரசியலிலும் உங்களின் லட்சியம் விரைவில் நிறைவேறும் இந்த ஆண்டு சோதனைகள் மறைந்து நன்மைகள் பலம் பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 8, 9.

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, பெப்ரவரி, மே, ஜூன், ஒகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு.

இந்த ஆண்டு முழுவதும் வணங்க வேண்டிய தெய்வங்கள்: ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், எள் கலந்த சாதம் நைவேத்தியம் வைத்து தொடர்ந்து வழிபட்டு வர இந்த ஆண்டு உங்களின் இலக்கை எளிதில் அடைந்து வெற்றி பெறும்.

மீனம்

வைராக்கியமும் மனவலிமையும் கொண்ட மீன ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் எதையும் நீங்கள் தொடர் முயற்சி எடுத்து வந்தால் வெற்றி நிச்சயம். குடும்ப வியாபாரம் இனி உங்களுக்கு வராது. எடுத்த செயலை முடித்து. அதில் வெற்றி பயணம் செய்து வருவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் சூரியனுடன் சந்திரன் அமர்வது தொழிலில் போட்டி பொறாமைகளால் இருந்து வந்த சூழ்நிலைகள் மறையும்.

எதையும் சொல்லாமல் செய்து வருவீர்கள். புதிதான எந்த திட்டமும் உங்களுக்கு சரியான தெளிவை கொடுக்காது என்பதால், அதனை தள்ளி வைக்கவும். உங்களுக்கு தற்சமயம் விரையசனி காலம் நடந்து வருவதால் எந்த புதிய முயற்சிகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு பிணயம் இடுவதும், பொறுப்பு ஏற்று பணம் கொடுப்பதும் உங்களுக்கு அதனை இழக்கும் சூழ்நிலை உருவாகும். 

எதையும் குழப்பிக்கொள்ளாமல் எந்த முடிவாக இருந்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. காலம் அறிந்து செயல்படுவது நல்லது. குறுகிய கால முதலீடுகளில் விரையம் வராமல் தெழில் செய்து கொள்வது நல்லது. இந்த ஆண்டு மத்தியில் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆரம்பத்தில் கஷ்டம் இருந்தாலும் யோக பொருட்களின் செல்வாக்கும். 

சொல்வாக்கும் சிறப்பாக அமையும். இசை கலையில் உங்களுக்கு நற்பெயரும், பாராட்டுதலும் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் அவசரம் இன்றி இருப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்பு இருந்தாலும் அதிக பாதிப்பை தராது. எதற்கும் நீங்கள் உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். அரசியலில் விருப்பம் இல்லை என்றாலும் சில நேரம் தலையீடுகள் இருக்கும். 

அதிக ஆர்வம் செலுத்தினால் விரையம் உண்டாகும். குடும்ப சூழ்நிலை காரணமாக சிலருக்கு வேறு வேலையை தேடிவரும். சூழ்நிலை உண்டாகும். பணத்தை தேடி நீங்கள் அலைவேண்டாம். நேரம் வரும்போது காலச்சரியான போது தானே பணம் உங்களை தேடிவரும். மொத்தத்தில் இந்த ஆண்டு லாபமும், நஷ்டமும் கலந்ததாக அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 1, 2, 5.

அதிர்ஷ்ட மாதங்கள்: ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஜூலை, ஒகஸ்ட், ஒக்டோபர், நவம்பர்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, சிவப்பு.

இந்த ஆண்டு முழுவதும் வணங்கவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், சுப்ரமணியருக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றி, உங்களின் வேண்டுதலை சொல்லி வர எதிர்கால நற்பலன்கள் மேன்மை உண்டாகும்.

கணித்தவர் : ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14