ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளின் நிவாரணத்திற்காக ஸ்பீச் தெரபி, ஒக்குபேஷனல் தெரபி என பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தகைய குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பிலிருந்து விரைவாக நிவாரணம் அளிக்க ஏ பி ஏ தெரபி எனும் நவீன சிகிச்சை முறை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய பிள்ளைகள் ஏ டி ஹெச் டி - ஆட்டிசம் - கற்றல் திறன் குறைபாடு- போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தால் அவர்களை ஏனைய குழந்தைகளைப் போல் இயல்பான பிள்ளைகளாக உருவாக்குவதற்கு நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகி இருக்கிறது.
ஸ்பீச் தெரபி- ஒக்குபேசனல் தெரபி- உளவியல் ஆலோசனை - சமூகவியல் நடத்தை சிகிச்சை - போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏ பி ஏ ( Applied Behaviour Analysis) தெரபி எனும் சிகிச்சை முறை அறிமுகமாகி இருக்கிறது.
சில பிள்ளைகள் துறுதுறுவென சுற்றிக் கொண்டே இருப்பார்கள். ஓரிடத்தில் உட்காரவோ நிற்கவோ மாட்டார்கள் இவர்களை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருக்கும் சில பிள்ளைகள் வகுப்பறையில் ஒருமுக கவனம் இல்லாமல் இருப்பார்கள் அதாவது கவனச் சிதறலுடன் இருப்பார்கள்.
எதிலும் கவனம் செலுத்த மாட்டார்கள் இவர்களை அவர்களுடைய பெயரைச் சொல்லி அழைத்தாலும் அதற்கு எந்தவித எதிர் வினையையும் செய்ய மாட்டார்கள் தொலைக்காட்சி, கைப்பேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள்.
வகுப்பறையில் அவர்களுக்கு உரிய இடத்தில் அமராமல் ஒவ்வொரு இடத்திற்கும் நடந்தும் குறுக்கும்நெடுக்குமாக ஓடியும் பலருக்கு இடையூறை விளைவிப்பார்கள். பிடிவாதம் -உரத்த குரலில் கத்துவது- போன்ற நடத்தைகளையும் கொண்டிருப்பார்கள்.
அன்பாக பேசினாலும் ஆதரவாக அரவணைத்தாலும் மிரட்டினாலும் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். இதற்கான புரிதலையும் குறைவாகவே கொண்டிருப்பார்கள். இவர்கள் வளரும் போது அவர்களுடைய மொழித்திறன், சிந்திக்கும் ஆற்றல், ஏனைய மாணவ மாணவிகளுடன் இயல்பாக பழகும் தன்மை ஆகியவற்றில் சமச்சீரற்ற தன்மை இருக்கும்.
இதற்கு ஏ பி ஏ தெரபி மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் பிள்ளைகளுக்கு அவர்களின் விருப்பத்திற்குரிய விளையாட்டின் வழியாக சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் பிள்ளைகளிடத்தில் பொறுமை, நிதானம், நேர்முகமான சிந்தனை திறன் மேம்பாடு, எதிர்மறையான சிந்தனையை அழிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகியவற்றை கற்பிப்பார்கள். இதனூடாக அவர்களின் குறைபாடு மறைந்து ஏனைய பிள்ளைகளைப் போல் அவர்களும் இயல்பானவர்களாக மாறி விடுவார்கள்.
வைத்தியர் பார்வதி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM