எம்மில் பலரும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நாட்பட்ட நோய் பாதிப்பை கண்டு அஞ்சுவதை விட, வாங்கிய கடனுக்காக.. கடன் கொடுத்தவர்களின் விவரிக்க இயலாத நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு தான் அஞ்சுவார்கள். நோய் பாதிப்பை புரிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொள்வதற்கு மனதளவில் தயாராகி விடுவார்கள்.
ஆனால் கடன் நெருக்கடிக்கு முகம் கொடுப்பவர்கள் கடுமையான உளவியல் சிக்கலுக்கு ஆளாகி, தங்களின் ஆற்றலை இழந்து கொண்டிருப்பார்கள்.
இதனாலையே கடனை வாங்கி விட்டால் அதனை முறையாக செலுத்த வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சிலருக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் பல்வேறு காரணங்களால் முரண்பாடுகள் ஏற்படும். இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பதுடன் அழுத்தமும் வழங்குவார்கள்.
இதனால் செய்வது அறியாது திகைத்து நிற்பார்கள். இந்நிலையில் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கான எளிய வழிமுறையை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : நெல்லிக்காய்.
நெல்லிக்காயில் மகாலட்சுமி வாசம் செய்வதால் .. எம்முடைய முன்னோர்கள் அதனை மகாலட்சுமியின் அம்சம் என குறிப்பிடுகிறார்கள். இந்த கனி எம்முடைய வீடுகளில் இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமியும், ஸ்ரீமன் நாராயணனும் அருள்புரிவதாக ஐதீகம்.
இந்த நெல்லிக்கனியை வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் 21 எண்ணிக்கையில் வாங்கி அதனை மாலையாக கோர்த்து அருகில் இருக்கும் சிவாலயத்தில் தனிச்சன்னதியுடன் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கு சாற்றி வழிபட வேண்டும்.
பிறகு அந்த நெல்லிக்கனியை அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விட வேண்டும். அதிலிருந்து ஒரே ஒரு நெல்லிக்கனியை மட்டும் நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
இப்படி தொடர்ச்சியாக ஐந்து வாரங்களுக்கு வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் துர்க்கை அம்மனுக்கு நெல்லிக்காய் மாலையை சாற்றி வழிபட்டால்... உங்களுடைய கடன் சுமை 48 நாட்களில் குறைய தொடங்குவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM