(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 234 ஓட்டங்களைக் குவித்த ரஹ்மத் ஷா, ஆப்கானிஸ்தான் சார்பாக அதிகூடிய டெஸ்ட் இன்னிங்ஸ் ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன்னர் அபு தாபி விளையாட்டரங்கில் இதே அணிக்கு எதிராக 2021ஆம் ஆண்டு ஹஷ்மத்துல்லா ஷஹிதி குவித்த ஆட்டம் இழக்காத 200 ஓட்டங்களே ஆப்கானிஸ்தான் சார்பாக தனிநபருக்கான அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களாக இருந்தது.
எவ்வாறாயினும், இப் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆட்டம் இழக்காமல் 179 ஓட்டங்களைப் பெற்றுள்ளதால் ரஹ்மத் ஷாவின் புதிய சாதனை முறியடிக்கப்படலாம் என கருதப்படுகிறது.
ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரே ஆப்கானிஸ்தான் சர்பாக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதங்கள் குவித்துள்ள வீரர்களாவர்.
இரண்டு அணிகளும் தத்தமது முதலாவது இன்னிங்ஸ்களில் 500 க்கும் மேற்பட்ட மொத்த எண்ணிக்கைகளைக் குவித்துள்ள இப் போட்டியில் ஸிம்பாப்வே சார்பாக மூவரும் ஆப்கானிஸ்தான் சார்பாக இருவரும் சதங்கள் குவித்து அசத்தினர்.
ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 364 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இந்த இணைப்பாட்டம் சகல நாடுகளுக்கும் எதிராக ஆப்கானிஸ்தான் சார்பாக பெறப்பட்ட சகல விக்கெட்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாகவும் பதிவானது.
இப் போட்டியில் இன்னும் ஒரே ஒருநாள் மாத்திரம் மீதம் இருப்பதால் ஆட்டத்தில் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை.
எண்ணிக்கை சுருக்கம்
ஸிம்பாப்வே 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 586 (சோன் வில்லியம்ஸ் 154, ப்றயன் பெனட் 113 ஆ.இ., க்றெய்க் ஏர்வின் 101, பென் கரன் 68, ஏ.எம். கஸன்பார் 127 - 3 விக்.)
ஆப்கானிஸ்தான் 1ஆவது இன்: - 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் - 515 - 3 விக். (ரஹ்மத் ஷா 234, ஹஷ்மத்துல்லா ஷஹிதி 179 ஆ. இ., அப்சார் ஸஸாய் 46 ஆ. இ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM