மாவனல்லை நகரத்தில் நிர்மாணப்பணியொன்று நடைபெற்றுவந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நிலச்சரிவில் மேலும் இருவர் சிக்குண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும், மீட்கும் பணிக்காக பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.