(நெவில் அன்தனி)
பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சூரியன், சுப்பர்ஸ்போர்ட் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டிய தென் ஆபிரிக்கா, முதலாவது அணியாக ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
ஐசிசி சம்பியன்ஷிப் வரலாற்றில் தென் ஆபிரக்கா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.
இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் அடுத்த வருடம் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் 10 போட்டிகளில் 63.33 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தலிருந்த தென் ஆபிரிக்கா, இந்த வெற்றியுடன் 11 போட்டிகளில் 66.67 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் இலகுவான 148 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா தோல்வியின் விளிம்பை அண்மித்து மீண்டுவந்து வெற்றியீட்டியது.
பாகிஸ்தானின் அசுர வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த தென் ஆபிரிக்கா 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நான்காம் நாளான இன்று காலை தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்த ஏய்டன் மார்க்ராம், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர்.
மார்க்ராம் 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் டேவிட் பெடிங்ஹாமுடன் 5ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்த டேம்பா பவுமா 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (96 - 5 விக்.)
மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது மேலும் 3 விக்கெட்கள் சரிந்தன.
டேவிட் பெடிங்ஹாம் (14), கய்ல் வெரின் (2), கோர்பின் பொஷ் (0) ஆகிய மூவரே ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தவர்களாவர். (99 - 8 விக்.)
ஆனால், வேகப்பந்துவீச்சாளர்களான மார்க்கோ ஜென்சன், கெகிசோ ரபாடா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு 2 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
கெகிசோ ரபாடா 31 ஓட்டங்களுடனும் மார்க்கோ ஜென்சன் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் மொஹம்மத் அபாஸ் 54 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
எண்ணிக்கை சுருக்கம்
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (கம்ரன் குலாம் 54, ஆமிர்
ஜமால் 28, மொஹம்மத் ரிஸ்வான் 27, டேன் பெட்டர்சன் 61 - 5 விக்., கோர்பின் பொஷ் 63 - 4 விக்.)
தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகல விக்கெட்களையும் இழந்து 301 (ஏய்டன் மார்க்ராம் 89, கோர்பின் பொஷ் 81 ஆ.இ., டெம்பா பவுமா 31, டேவிட் பெடிங்ஹாம் 30, குரம் ஷாஸாத் 75 - 3 விக்., நசீம் ஷா 92 - 3 விக்., ஆமிர் ஜமால் 36 - 2 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: சகல விக்கெட்களையும் இழந்து 237 (சவூத் ஷக்கீல் 84, பாபர் அஸாம் 50, ஷான் மசூத் 28, மார்க்கோ ஜென்சன் 52 - 6 விக்., கெகிசோ ரபாடா 68 - 2 விக்.)
தென் ஆபிரிக்கா - வெற்றி இலக்கு 148 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 150 - 8 விக். (டெம்பா பவுமா 40, எய்டன் மார்க்ராம் 37, கெகிசோ ரபாடா 31 ஆ.இ., மார்க்கோ ஜென்சன் 16 ஆ.இ. மொஹம்மத் அபாஸ் 54 - 6 விக்.)
ஆட்டநாயகன்: ஏய்டன் மார்க்ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM