(நெவில் அன்தனி)
வருடத்தின் அதிசிறந்த முன்னேறிவரும் வீரருக்கான ஐசிசி விருது உட்பட நான்கு ஐசிசி விருதுகளுக்கு இலங்கையர்கள் நால்வர் பிரேரிக்கப்பட்டுள்ளனர்.
முன்னேறிவரும் வீரருக்கான விருதுக்கு இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸின் பெயரை ஐசிசி நேற்று பரிந்துரைத்திருந்தது.
அவருடன் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சய்ம் அயூப், மேற்கிந்தியத் தீவுகளின் ஷமர் ஜோசப் ஆகியோரின் பெயர்களையும் ஐசிசி பிரேரித்திருந்தது.
மேலும் மூன்று விருதுகளுக்காக இன்றைய தினம் வெளியிடப்பட்ட குறும்பட்டியலில் இலங்கையர்களான வனிந்து ஹசரங்க, குசல் மெண்டிஸ், சமரி அத்தபத்து ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்குரிய குறும்பட்டியலில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
வனிந்து ஹசரங்க 10 போட்டிகளில் பந்துவீசி 26 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியிருந்தார். அதில் மூன்று 4 விக்கெட் குவியல்களும் ஒரு 5 விக்கெட் குவியலும் அடங்கியிருந்தது.
அவரது சராசரி 15.61 ஆகவும் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களாகவும் பதிவாகியுள்ளது.
துடுப்பாட்டத்தில் 5 இன்னிங்ஸ்களில் 87 ஓட்டங்களை வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார்
குசல் மெண்டிஸ் இந்த வருடம் 17 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 6 அரைச் சதங்களுடன் 53.00 என்ற சராசரியுடனும் 90.59 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 742 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.
விக்கெட் காப்பில் 12 பிடிகளை எடுத்துள்ள குசல் மெண்டிஸ் 7 ஸ்டம்ப்களையும் செய்துள்ளார்.
அவர்களுடன் ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், மேற்கிந்தியத் தீவுகளின் ஷேர்பெய்ன் ரதர்பர்ட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டில் இலங்கையின் சமரி அத்தபத்துவின் பெயர் இரண்டு ஐசிசி விருதுகளுக்கு பரிந்துரைகப்பட்டுள்ளது.
வருடத்தின் அதிசிறந்த மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருதுக்கும் வருடத்தின் அதிசிறந்த மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கும் சமரி அத்தப்பத்துவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் அதிசிறந்த மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்குரிய குறும்பட்டியலில் சமரி அத்தபத்துவுடன் ஸ்ம்ரித்தி மந்தனா (இந்தியா), அனாபெல் சதர்லண்ட் (அவுஸ்திரேலியா), லோரா வுல்வார்ட் (தென் ஆபிரிக்கா) ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சமரி அத்தப்பத்து 9 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 2 அரைச் சதங்களுடன் 458 ஓட்டங்களை மொத்தமாகக் குவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் கடந்த ஏப்ரல் மாதம் குவித்த ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்கள் இலங்கையை 6 விக்கெட்களால் வெற்றிபெறச் செய்திருந்தது. பந்துவீச்சில் சமரி அத்தப்பத்து 9 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
வருடத்தின் அதிசிறந்த மகளிர் ரி20 கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்குரிய குறும்பட்டியலில் சமரி அத்தபத்துவுடன் அமேலியா கேர் (நியூஸிலாந்து), ஓர்லா ப்ரெண்டர்காஸ் (அயர்லாந்து), லோரா வுல்வார்ட் (தென் ஆபிரிக்கா) ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் 2 சதங்கள், 4 அரைச் சதங்கள் உட்பட 720 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற சமரி அத்தப்பத்து, பந்துவீச்சில் 21 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
வருடத்தின் அதிசிறந்த ரி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்குரிய குறும்பட்டியலில் பாபர் அஸாம் (பாகிஸ்தான்) ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), அர்ஷ்தீப் சிங் (இந்தியா) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM