அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை பலவீனப்படுத்த போவதில்லை - சுனில் வடகல

Published By: Vishnu

29 Dec, 2024 | 05:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர். கிடைக்கப் பெற்றுள்ள மக்களாணையை ஒருபோதும் பலவீனப்படுத்த போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களுக்கான அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச செலவுகளை குறைத்து ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜனாதிபதி சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசியல் தரப்பினல் மாறுப்பட்ட கருத்தை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக பாதுகாப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் எவ்வித அரசியல் பழிவாங்களும் கிடையாது. அரச செலவுகளை குறைப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளோம். ஆகவே அதற்கமைவாக செயற்படுவோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் பலவீனப்படுத்த போவதில்லை.

அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினரை நாட்டு மக்கள் முழுமையாக அரசியலில் இருந்து புறக்கணித்துள்ளார்கள். ஆற்றாமையின் காரணமாகவே இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள். மக்களாணைக்கு மதிப்பளித்து எதிர்தரப்பினர் செயற்பட வேண்டும். 

சுதந்திரத்துக்கு பின்னராக காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03
news-image

9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின்...

2025-02-18 19:08:47
news-image

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி...

2025-02-18 17:27:45
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள...

2025-02-18 17:27:52
news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47