bestweb

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த சராசரியுடன் பும்ரா 200 விக்கெட்கள் பூர்த்தி

29 Dec, 2024 | 05:00 PM
image

(நெவில் அன்தனி)

மிகச் சிறந்த ஆட்டம் இழப்புகளை நிறைவேற்றிய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டுள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா 200 விக்கெட்களைப் பூர்த்திசெய்த 85ஆவது வீரரானார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட்டின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் பும்ரா 20 டெஸ்ட் விக்கெட்களை நிறைவுசெய்தார்.

தனது 44ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பும்ரா இதுவரை மொத்தமாக 202 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளதுடன் அவரது சராசரி 19.51ஆக அமைந்துள்ளது.

இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள பந்துவீச்சாளர்களில் 12ஆவது இடத்தில் பும்ரா இருக்கிறார்.

டென்னிஸ் லில்லி, வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் மிகக் குறைந்த 38 போட்டிகளில் 200 விக்கெட்களைக் கைப்பற்றியவர்களாவர்.

அவர்களுக்கு அடுத்ததாக டேல் ஸ்டேன் (39 போட்டிகள்), இயன் பொத்தம் (41), மெல்கம் மார்ஷல் மற்றும் அலன் டொனல்ட் (42 போட்டிகள்), அலெக் பெட்சர், ரிச்சர்ட் ஹெட்லி, ஜோயல் கானர், கெகிசோ ரபடா, பெட் கமின்ஸ், ஜஸ்ப்ரிட் பும்ரா (தலா 44 போட்டிகள்)  ஆகியோர்   குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களைப் பூர்த்தி செய்தவர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

4000 ஓட்டங்களுக்குள் 200 விக்கெட்களைப் பூர்த்திசெய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பும்ராவின் பந்துவீச்சு சராசரி முதலிடத்தில் இருக்கிறது.

அவரது சராசரி 19.56ஆக இருப்பதுடன் இரண்டாம் இடத்தில் 4067 ஓட்டங்களுக்கு 200 விக்கெட்களைப் பூர்த்தி செய்த ஜோயல் கானரின் சராசரி 20.34ஆக இரண்டாம் இடத்திலும் ஷோன் பொல்லெக் 4077 ஓட்டங்களுக்கு 200 விக்கெட்களைப் பூர்த்திசெய்து 20.39 என்ற சராசரியுடன் 3ஆம்  இடத்திலும்   இருக்கின்றனர்.

பும்ரா கைப்பற்றியுள்ள 202 விக்கெட்களில் 155 விக்கெட்கள் அந்நிய மண்ணில் கைப்பற்றப்பட்டவையாகும். மற்றைய 47 விக்கெட்களை அவர் சொந்த மண்ணில் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அவரது ஆற்றல் அந்நிய மண்ணில் எத்தகையது என்பது தெளிவாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55