கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புலதிசி கடுகதி ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள மின்னேரிய தேசிய வனப் பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
கிழக்கு ரயில் வீதியின் ஹபரனை ரயில் நிலையத்துக்கும் கல்ஒய சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் யானை உயிரிழந்து கிடப்பதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் 12 - 15 வயதுக்குட்பட்ட (எத்தின்ன) பெண் காட்டுயானையே உயிரிழந்துள்ளது.
ரயிலில் மோதிய யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர்களினால் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் யானை உயிர் பிழைக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வனஜீவராசிகள் திணைக்கள மின்னேரிய அலுவலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM