நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் சிறுவன் ஒருவனை மட்டக்குதிரை ஒன்று தாக்கியதால் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (28) பதிவாகியுள்ளது.
வருட இறுதி என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் நுவரெலியாவுக்கு வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருகைதந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கிரகரி வாவி கரையோர வீதியில் நடந்து சென்றபோது சவாரிக்காக கொண்டு வரப்பட்ட மட்டக்குதிரை ஒன்றே திடீரென சிறுவனை தாக்கி காயப்படுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதன் பின்னர், அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த நுவரெலியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடு செய்து சிறுவனை தாக்கிய மட்டக்குதிரையின் உரிமையாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, நுவரெலியாவில் சுற்றித் திரியும் மட்டக்குதிரைகள் பிரதான வீதிகளில் தாறுமாறாக ஓடி சுற்றுலாப் பயணிகளை உதைப்பதும் கடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே வீதிகளில் சுற்றித் திரியும் மட்டக்குதிரைகளை அப்பகுதியிலிருந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதையும் மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து அதிகபட்ச தண்டப்பணம் விதிக்க வேண்டும் என பொது மக்களும் வாகன சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM