மலையகத்தில் கிராம்பு, சாதிக்காய் அறுவடையில் வீழ்ச்சி! - விவசாயிகள் கவலை

29 Dec, 2024 | 12:48 PM
image

மலையகப் பிரதேசங்களில் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக உள்ளூர் ஏற்றுமதி உற்பத்திகளான கிராம்பு, சாதிக்காய் போன்றவற்றின் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

மாத்தளை, ஹாரிஸ்பத்துவ, வத்தேகம, உக்குவலை, அளவத்துகொடை, முருதலாவை, கடுகண்ணாவை, கம்பளை, இரத்தோட்டை போன்ற பிரதேசங்களில் அதிகளவில் கிராம்பு மற்றும் சாதிக்காய் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அப்பிரதேசங்களில் தொடர்ந்து பல நாட்கள் பெய்த மழை காரணமாக பயிர்களில் ஒருவகை வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளன. 

பொதுவாக பெப்ரவரி மாதமளவில் அறுவடை மேற்கொள்வதாகவும் ஆனால் இம்முறை அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட இடமிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தெடர்பாக ஏற்றுமதி விளைபொருட்கள் திணைக்கள அதிகாரி ஒருவர், 4 அல்லது 5 நாட்களில் கிராம்பின் பிஞ்சுக் காய்கள் கழன்று சென்றுவிடுவதாகவும் கடும் மழை பெய்வதால் இம்முறை கிராம்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17