(நெவில் அன்தனி)
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி முன்னேற்றகரமான வீரர் விருதுக்கான ஐசிசியின் குறும்பட்டியலில் இலங்கையின் இடதுகை துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
26 வயதான கமிந்து மெண்டிஸுடன் இந்த விருதுக்கு இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சய்ம் அயூப், மேற்கிந்தியத் தீவுகளில் ஷமர் ஜோசப் ஆகியோரும் பிரேரிக்கப்பட்டுள்ளனர்.
கமிந்து மெண்டிஸ் இந்த வருடம் விளையாடிய 9 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 16 தடவைகள் துடுப்பெடுத்தாடி 1049 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் 2022இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தார்.
இதில் 5 சதங்கள் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அரிய மைல்கல்லை கமிந்து மெண்டிஸ் எட்டியிருந்தார்.
தனஞ்சய டி சில்வாவும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்திருந்தார்.
தனஞ்சய டி சில்வாவுடன் 1ஆவது இன்னிங்ஸில் 6ஆவது விக்கெட்டில் 202 ஓட்டங்களையும் 2ஆவது இன்னிங்ஸில் 7ஆவது விக்கெட்டில் 263 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் பகிர்ந்து இலங்கையின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக மென்செஸ்டர் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் மாதம் அவர் குவித்த சதமும், கியா ஓவல் விளையாட்டரங்கில் செப்டெம்பர் மாதம் அவர் பெற்ற அரைச் சதமும் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத இன்னிங்ஸ்களாகும்.
தொடர்ந்து காலியில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே 114 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.
இந்த வருடம் 7 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 104 ஓட்டங்களையும் 17 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 298 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
முன்னேற்றகரமான வீரர்கள் குறும் பட்டியலில் இடம்பெறும் கஸ் அட்கின்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானின் சய்ம் அயூப் மூவகை கிரிக்கெட்டிலும் மேற்கிந்தியத் தீவுகளின் ஷமர் ஜோசப் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டில் முன்னேற்றகரமான வீராங்கனைகளுக்கான குறும் பட்டியலில் தென் ஆபிரிக்காவின் சகலதுறை வீராங்கனை ஆன்ரீ டேர்க்சன், ஸ்கொட்லாந்தின் சஸ்கியா ஹோலி, இந்தியாவின் ஷ்ரெயன்கா பட்டில், அயர்லாந்தின் ஃப்ரெயா சாஜன்ட் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM