எம்முடைய வீடுகளிலும் , வணிக நிறுவனங்களிலும் , விற்பனை நிலையத்திற்கும் காலையில் எழுந்ததும் அல்லது வணிகத்தை தொடங்கும் போது அங்குள்ள இறைவனின் உருவப்படத்திற்கு விளக்கேற்றுவோம்.
சிலர் நல்லெண்ணெய்.. சிலர் நெய்.. ஆகியவற்றை பயன்படுத்துவர். அந்த தருணத்தில் திரியையும் பயன்படுத்துவர். பொதுவாகவே இறை வணக்கத்தின் போது தவறாமல் தீபமேற்றி வழிபடுவர்.
ஒவ்வொரு வீட்டிலும் காமாட்சி விளக்கு- அகல் விளக்கு - என ஏதேனும் ஒரு விளக்கு இருக்கும். அதில் தீபமேற்றுவர். சிலர் ஒரு முகமாகவும்.. சிலர் ஐந்து முகமாகவும் .. விளக்கேற்றி இறைவனை வழிபடுவர்.
இந்தத் தருணத்தில் நாம் இறைவனிடம் பிரார்த்திக்கும் போது அந்தப் பிரார்த்தனை முழுமையாக பலன் அளிக்க வேண்டும் என்றால்... நீங்கள் ஏற்றும் விளக்கு, நெய் ஆகியவற்றுடன் திரிக்கும் முக்கியத்துவம் உண்டு என ஆன்மீக முன்னோர்களும், ஜோதிட நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக எந்த திரியை நீங்கள் ஏற்றும் தீபத்தில் வைத்தால்.. எம்மாதிரியான பலன் கிடைக்கும் என்பதையும் விவரித்திருக்கிறார்கள். அந்த பட்டியலை கீழே காண்போம்.
பொதுவாக திரி என்பது பஞ்சு திரி - தாமரை தண்டு திரி - வாழைத்தண்டு திரி - வண்ண துணியிலான திரி- வெள்ளெக்கு பட்டையாலான திரி - என பல வகைகள் உள்ளன.
திருமண சுபமாக நடைபெற வேண்டும் என்றால்.. நீங்கள் ஏற்று தீபத்தில் பஞ்சு திரியை பாவிக்க வேண்டும். ஏனெனில் பஞ்சு திரியை பயன்படுத்தினால் மங்கலம் உண்டாகும். அதாவது சுப காரியம் தடையின்றி நிறைவேறும்.
கடந்த பிறவியில் செய்த தீவினைகளை இந்த பிறவியில் நீக்குவதற்காக ஆன்மீக முன்னோர்கள் மற்றும் ஜோதிட நிபுணர்களுக்கு வழிகாட்டுதலின்படி பிரத்யேக ஆலயங்களுக்கு சென்று நீங்கள் அங்குள்ள சிவபெருமானை வழிபடும்போது விளக்கேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருப்பார்கள்.
அதன் போது மறவாமல் தாமரை தண்டு திரியை பாவிக்க வேண்டும். ஏனெனில் தாமரைத் தண்டு திரி முன் ஜென்ம பாவங்களை நீக்குவதுடன் இந்த பிறவியில் நீங்கள் அனுபவிப்பதற்கான செல்வ வளத்தை அருளும் ஆற்றலை பெற்று இருக்கிறது.
சில ஆண்டுகளாகவோ அல்லது ஒரு தலைமுறையாகவோ நீங்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடவில்லை என்றால்.. அதனால் தெய்வ குற்றம் உண்டாகும். அதே தருணத்தில் தகாத தருணத்தில் ஆலயங்களுக்கு சென்றாலும்.. அதனாலும் தெய்வ குற்றம் ஏற்படும் .
இது போன்ற தெய்வ குற்றம் ஏற்பட்டு அதனை நீக்க வேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்திக்கும் போதும் நீங்கள் ஏற்றும் தீபத்தில் வாழைத்தண்டு திரியை பயன்படுத்த வேண்டும். இந்த திரியை பயன்படுத்தி நீங்கள் பிரார்த்திக்கும் போது உங்களுடைய தெய்வக் குற்றம் நீங்கி குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
பெரு வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலதிபர்கள் தங்களுக்கு தேவைப்படும் லட்சக் கணக்கிலான அல்லது கோடி கணக்கிலான கடன் தொகையையும்.. நிதி உதவியும் .. வேண்டுமென்றால் , நீங்கள் இறைவனை வணங்கும்போது ஏற்றும் தீபத்தில் வெள்ளெருக்கு பட்டையிலான திரியை பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாக நீங்கள் நினைத்த அளவிற்கு பண உதவி கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
எம்மில் சிலர் அம்பாளின் வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவார்கள். அம்பாளை வழிபடும்போது உங்களுக்கான பரிபூரண பலன் கிடைக்க வேண்டும் என்றால் ..மஞ்சள் வண்ண துணியினால் உருவாக்கப்பட்ட திரியை தீபத்தில் ஏற்றி வழிபட வேண்டும். இந்தத் திரி அம்பாளின் அருளை முழுமையாக பெற்றுத்தரும்.
எம்மில் சிலருக்கு திருமண தடை ஏற்பட்டிருக்கும் இதற்காக பல பரிகாரங்களை செய்திருப்பர். இதற்காக பல ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றிருப்பார்கள்.
ஆனால் அங்கு கிடைக்கும் திரியை பயன்படுத்தி இருப்போம். இதனால் முழுமையான பலன் கிடைத்திருக்காது. ஆனால் திருமணத்தடையை நீக்குவதற்காக நீங்கள் தீபமேற்றும் போது சிவப்பு வண்ண துணியினால் உருவாக்கப்பட்ட திரியை பயன்படுத்த வேண்டும் .
இது உங்களுக்கு திருமண தடையை அகற்றி சுப பலனை வழங்கும் ஆற்றலை பெற்றது. அதே தருணத்தில் திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியத்தில் ஏதேனும் தடை இருந்தாலும் ..அதனையும் நீக்கும் வல்லமை பெற்றது இந்த சிவப்பு வண்ண துணியினாலான திரி. இந்த சிவப்பு வண்ண துணியிலான திரியை ஏற்றி நீங்கள் வழிபடும் போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய உடல் ரீதியான தடையை குறிப்பாக மலட்டுத்தன்மையை அகற்றி புத்திரபாக்கியத்திற்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல் செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் ... எளிதில் நீக்குவதற்காக நீங்கள் ஏற்றும் தீபத்திலும் இந்த சிவப்பு வண்ண துணியிலான திரியை பயன்படுத்தினால்.. பலன் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும்.
அதே தருணத்தில் எம்முடைய குடும்பத்தில் சுபிட்சம் நிலவ வேண்டும்... அனைவரும் மகிழ்ச்சியாகவும், மன மகிழ்ச்சியாகவும் ..செல்வ வளம் குறைவில்லாமல் வாழ வேண்டும் என விரும்பினால் .. நாளாந்தம் உங்களுடைய பூஜை அறையில் நீங்கள் விளக்கேற்றும் போது வெண்மை வண்ணத்திலான துணியிலான திரியை பாவிக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு பலன்களுக்கும் தீர்வு காண பிரத்யேக திரியை பாவித்து பலன்களை பெற்றுக் கொள்ளுங்கள் என என்னுடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM