வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு,  இப்ராஹீம் நாஸிர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

மாலைதீவு  வெளிவிவகார அமைச்சர் துன்யா மஃமூனின் அழைப்பின் பேரில்  சென்றுள்ள அமைச்சர்களை, விமான நிலையத்தில் வைத்து  மாலைதீவு வெளிவிவகார பிரதி அமைச்சர் பாத்திமத் இனாயா மற்றும் அமைச்சின் செயலாளர் {ஹஸைன் நியாஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர். 

இரு நாட்டின் உறவு தொடர்பில் கலந்துரையாடவே அமைச்சர்கள் இருவரும் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.