பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்

28 Dec, 2024 | 05:09 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (27)  திடீர் விஜயம் மேற்கொண்டார். 

 இந்த  விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இங்கு வைத்தியசாலையின் ஒரு பிரிவுக்கான இயந்திரங்கள் பழுதடைந்தமை தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு விடையளிக்கும் முகமாக துரித கதியில் அவற்றை திருத்தியமைக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். 

வைத்தியசாலையின் சுற்றுச்சூழலையும் அதிகாரிகள் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ரகுமானுடன் சென்று பார்வையிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு வைத்திய அத்தியட்சகர் வைத்தியசாலையில் செயற்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி திட்ட வரைபுகளுடனான முன்மொழிவை  தெளிவுபடுத்தினார்.

மேலும் இதன் போது குறித்த வைத்தியசாலையின் புதிய கட்டட நிர்மாணங்களை பார்வையிட்ட அவர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பல மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவ்விடத்தில் உறுதியளித்தார்.

பின்னர் அங்கு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுகமக்களிடம் சிநேக பூர்வமாக உரையாடி குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இத்திடீர் விஜயத்தினை அடுத்து வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் குறைநிறைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும்  அவர் கலந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08
news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11