bestweb

அரசியல் குழுவின் தலைவராக மாவை; பதில் தலைவராக சிவஞானம் - சுமந்திரன்

28 Dec, 2024 | 03:53 PM
image

தமிழரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார். 

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) நடைபெற்றது.

இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 

அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்தபோதும் 18 உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது.

திரு மாவை சேனாதிராஜா கட்சியின் நன்மை கருதி அவரது நற்பெயருக்கு களங்கம் இல்லாமல் தன்னுடைய ராஜினாவை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு எதிரான கருத்துக்களும் இருந்தது.

இறுதியில் கட்சி ஏகமனதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறது. மாவை சேனாதிராஜா கட்சியினுடைய அரசியல் குழுவின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார். 

கட்சியின் தலைவர் ராஜினாமா செய்தால் இன்னொருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று எமது யாப்பிலும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வகையில் எஞ்சிய காலத்துக்கு பதில் தலைவராக கட்சியினுடைய சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே. சிவஞானம் செயற்படுவார் என்று ஏகமனதாக வாக்கெடுப்பு இல்லாமல் பிரிவினை இல்லாமல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

ஆகவே, கட்சித் தலைவர் பதவியை சிவஞானம் வகிப்பார். அரசியல் குழு என்பது குழுவாக எடுக்கப்படும் தீர்மானங்களை மையப்படுத்தி, மத்திய செயற்குழு சந்திக்க முடியாத தருணங்களில் அரசியல் குழு கூடுவது வழக்கமாக இருக்கிறது. பல முக்கிய விடயங்களை அரசியல் குழுவே எடுத்திருக்கிறது. 

எனவே முன்னைய காலத்தில் மாவை சேனாதிராஜா கட்சித் தலைமை பொறுப்பை எடுத்தபோது சம்பந்தன் அவர்களை அரசியல் குழுவின் தலைவராக நியமித்திருந்தோம். அதன் அடிப்படையிலேதான் இப்போது மாவை சேனாதிராஜா அந்த பதவியினை வகிப்பார் என்ற தீர்மானம் எடுத்துள்ளோம்.

இதேவேளை கட்சி தொடர்பாக யாழில் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை கட்டளைகள் எதும் வழங்கப்படவில்லை. எனவே அதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்கு இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52