வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (22) கடையை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை  நேற்று (22) மதியம் 2.30 மணியளவில் கடையின் பிற்பகுதியின் கதவினையுடைத்து சுமார் 24,000 பெறுமதியான கமரா , 18,000 பெறுமதியான செம்சுங் தொலைபேசி , டயலோக் அட்டை என்பன களவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா சாந்தசோலையினை சேர்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த சிறுவனை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.