பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லலித் கன்னங்கர“ வின் உதவியாளர்கள் நால்வர் கைது

28 Dec, 2024 | 02:11 PM
image

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “லலித் கன்னங்கர“ என்பவரின் உதவியாளர்கள் நால்வர் நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முல்லேரியா மற்றும் தொம்பே ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தித்தபத்தர, இராஜகிரிய , தலங்கம மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 27,28,30 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 22 கிராம் 70 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 90 போதை மாத்திரைகள் 20 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா மற்றும் தொம்பே பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை:...

2026-04-20 09:46:40
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14
news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54