உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் குமார் நடிப்பில் உருவான 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'சாவாதீக 'எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடல் குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார் , திரிஷா ,அர்ஜுன் , ஆரவ், நிகில் நாயர், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' மல்லி மல்லியே' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது . இந்த பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, பின்னணி பாடகர் அந்தோணி தாசன் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய துள்ளல் இசை தாள லயத்தில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் பாடல் வரிகள் அனைத்தும் வணிக நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM