இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட 'பயாஸ்கோப்' படத்தின் முன்னோட்டம்

Published By: Digital Desk 2

28 Dec, 2024 | 01:54 PM
image

நடிகர் சத்யராஜ் மற்றும் சேரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் ' பயாஸ்கோப் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

'வெங்காயம் 'எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'பயாஸ்கோப் 'எனும் திரைப்படத்தில் சங்ககிரி ராஜ்குமார், மாணிக்கம் , வெள்ளையம்மாள், முத்தாயி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ' சத்யராஜ், இயக்குநரும், நடிகருமான சேரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ்  ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்திர சூரியன் , பிரபு,  பெரியசாமி , ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் ஒரு குடும்பமே  திரைப்படத்தை உருவாக்குகிறது .அது எப்படி சாத்தியமானது? என்பது தொடர்பான வித்தியாசமான காட்சிகள் சுவராசியமாகவும், அவல நகைச்சுவையை மையப்படுத்தியும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

இதனிடையே 'வெங்காயம் 'எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரிடம் இயக்குநர் மிஷ்கின் நீங்கள் வெங்காயம் படத்தை தனி ஆளாக உருவாக்கியதன் பின்னணியை  சுவராசியமான திரைப்படமாக உருவாக்குங்கள் ' என கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்