கிராந்துருகோட்டை, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக கிடப்பதை கண்ட பிரதேசவாசிகள் சிலர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க 08 அடி உயரமுடைய காட்டு யானை ஒன்றே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த காட்டு யானை மின்சாரம் தாக்கி அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM