ஐ.பி.எல். 2017 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிபெற்றதை அந்த அணி வீரர் ஜோஸ் பட்லர், நிர்வாண நடனம் போட்டு கொண்டாடியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். 2017 இறுதிப்போட்டி நேற்று இரவு  நடைபெற்றது. 

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் பந்தில் 1 ஓட்டம்  வித்தியாசத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைஸிங் புணே சூப்பர்ஜெயின்ட் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

இந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விளையாடி வந்தார். 

இந்நிலையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு பயிற்சி மேற்கொள்ள நாடு திரும்பினார். 

இதன்காரணமாக அவரால் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

எனினும், மும்பை அணி விளையாடும் இறுதிப்போட்டியை நேரலையில் ஆவலுடன் பார்த்து, இரசித்துக் கொண்டிருந்தார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் பந்தில் மும்பை அணி ஒரு ஓட்ட வித்தியாசத்தில் புணே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. மேலும், 3-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இதனிடையே, ஆர்வமிகுதியால் தான் கட்டியிருந்த டவல் கழன்று விழுவது கூட தெரியாமல் வெற்றியை கொண்டாடினார். இதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.