(எம்.வை.எம்.சியாம்)
1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் வியாழக்கிழமை (26) இந்தியாவிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பிரிவெல்த் குளோபல் எனும் நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்துள்ள சந்தேக நபர்கள் அதிக இலாபத்தை பெற்றுத்தருவதாக்கூறி 160 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளனர்.இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.மேலும் சந்தேக நபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் சிவப்பு எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய சந்தேகநபர்கள் இந்தியாவின் வேதநாயகம் பிரதேசத்தில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் மூன்று வருடங்கள் அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் நேற்றுமுன்தினம் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் அவரது 43 வயதுடைய மனைவி மற்றும் 14 வயதுடைய மகனும் நேற்றுமுன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இருவேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய குறித்த நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்க வில்லை எனவும் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர்கள் சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து வியாபாரத்தை ஆரம்பித்ததாகவும் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதையடுத்து நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM