(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலருடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எம்முடன் இணையவுள்ளவர்கள் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களுக்காக மாத்திரம் கூட்டணி அமைக்கப்பட்டதே தவிர, நிரந்தரமாக எவ்வித கூட்டணியும் அமைக்கப்படவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியமைத்த கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இனிவரும் தேர்தல்களில் கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா,
ஒன்றிணைந்து பயணிக்க விரும்புபவர்களுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமையவே வெள்ளிக்கிழமை (27) பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. பொதுஜன ஐக்கிய முன்னணியாகவே நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். புதிய ஜனநாயக முன்னணியுடனான கூட்டணியை நீண்ட காலம் தொடரும் நோக்கில் நாம் செயற்படவில்லை.
அதனை பொதுத் தேர்தலின் போதும் தெரிவித்திருந்தோம். உத்தேச தேர்தல்கள் அனைத்திலும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இந்த கூட்டணியின் ஒரு பங்காளியாகும். முற்போக்கு கொள்கையுடையவர்கள் அனைவரையும் ஒரே முகாமுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளையே நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM